பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள அரசியலமைப்பு தொடர்பிலான இடைக்கால அறிக்கையோடு சேர்த்துக் கொள்ளப்படவுள்ள, நிலைப்பாட்டு அறிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வழிநடத்தல் குழுவின் உறுப்பினர்களாகிய இரா.சம்பந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரின் கையொப்பத்துடன் கடந்த ஆகஸ்ட் மாதம் 29ஆம் திகதி ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனினால் குறித்த அறிக்கை நேரடியாக கையளிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து மறுதினமே (ஆகஸ்ட் 30) குறித்த ஆவணமானது அரசியலமைப்பு வழிநடத்தல் குழு செயலகத்திற்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
குறித்த ஆவணம் கையளிக்கப்பட்ட நேர காலம் தொடர்பில் வெளிவரும் மாறுபட்ட நிலைமைகளை தெளிவுபடுத்தும் நோக்கில் இந்த ஊடக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகபேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

0 Responses to அரசியலமைப்பு வரைபு தொடர்பிலான த.தே.கூ.வின் நிலைப்பாட்டு அறிக்கை கையளிப்பு!