Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வரும் இரு ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகளுக்கு 2.11 இலட்சம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்யப்படும் என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

வங்கிகளை பலப்படுத்தும் போது பொருளாதாரம் பலமடையும் மேலும் வங்கி பங்குகளும் உயரும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் வங்கித்துறையில் வருங்காலத்திலும் சீர்த்திருத்தங்கள் தொடரும் என்றும் ஜெட்லி கூறியுள்ளார்.

இதில் 1.35 இலட்சம் ரூபாய் கோடி கடன் பத்திரங்கள் மூலமும், மீதமுள்ள 76,000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இருந்து ஒதுக்கப்படும் என்றும் நிதிச் சேவைகள் துறை செயலாளர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.

வங்கிகளில் முதலீடு செய்யும் பட்சத்தில் வங்கிகள் பெரிதாகவும், பலமாகவும் உயரும். தவிர நிதி இருப்பதால் கடன் வளர்ச்சி விகிதம் உயரும். தேவைப்படும் துறைகளுக்கு கடன் கிடைக்கும். இதன் மூலம் சிறு மற்றும் குறு தொழில்களின் வளர்ச்சி வேகமாக இருக்கும் என ராஜீவ் குமார் கூறியுள்ளார்.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எஸ்பிஐ தலைவர் ரஜ்னீஷ் குமார் வரவேற்றிருக்கிறார். மேலும் இதன் மூலம் தனியார் முதலீடுகள் உயரும் என்றும் தெரிவித்திருக்கிறார். பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் 8.35 இலட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to இரு ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகளில் 2.11 இலட்சம் கோடி ரூபாய் முதலீடு: அருண் ஜெட்லி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com