Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

“சமூக இணையதளங்கள் மூலமாக பரப்பப்படும் தீவிரவாதம், உலக நாடுகளின் பாதுகாப்புக்கு மிக மோசமான அச்சுறுத்தல். இதை தடுக்க அனைத்து நாடுகள் ஒன்றாக இணைந்து போராட வேண்டும்.” என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ஏசியான் பாதுகாப்புத்துறை அமைச்சர்களின் நான்காவது கூட்டம் பிலிப்பைன்சில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பாதுகாப்புத்துறை அமைச்சராக பொறுப்பேற்றபின், முதல் வெளிநாட்டு பயணம் மேற்கொண்ட நிர்மலா சீதாராமன் இதில் பேசியதாவது, “சமீபகாலமாக நமது மண்டலத்தில் உள்ள பாதுகாப்பு சூழலில் குறிப்பிடத்தக்க அளவு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இராணுவ ரீதியான மற்றும் வழக்கத்துக்கு மாறான அச்சுறுத்தல்களையும் நமது நாடுகள் ஒரே நேரத்தில் எதிர்க்கொள்ள தயாராக இருக்க வேண்டியுள்ளது.

தீவிரவாதம் என்பது எல்லா நாடுகளிலும் நிலவும் ஒரு நிகழ்வாகிவிட்டது. இதை எதிர்க்கொள்ள ஒட்டுமொத்தமான வலுவான நடவடிக்கை தேவை. பிலிப்பைன்சின் தென்பகுதியில் நிலவும் தீவிரவாதத்துக்கு, சரியான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இன்டெர்நெட்டிலும், சமூக இணைய தளங்களில் ஏற்பட்டுள்ள புதிய வளர்ச்சி, அச்சுறுத்தலை விரிவுபடுத்தியுள்ளது. இதை தீவிவாதிகள் தவறாக பயன்படுத்தி ரகசியமாக மக்கள் மனதை மாற்றுகின்றனர். தீவிரவாதத்தை சிறிதளவும் பொறுத்துக் கொள்வதில்லை என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை பிலிப்பைன்ஸ் வலியுறுத்துவதை பாராட்ட விரும்புகிறேன். தீவிரவாதம் எங்கிருந்தாலும், எல்லா இடத்துக்கும் அச்சுறுத்தல்தான். எல்லை கடந்த தீவிரவாதத்தை முறியடிப்பதில் இந்தியா உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.” என்றுள்ளார்.

0 Responses to சமூக இணையத்தளங்கள் மூலம் தீவிரவாதம் பரப்பப்படுகிறது: நிர்மலா சீதாராமன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com