Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கு - கிழக்கினை இணைத்து, தமிழர் தாயகம் அங்கீகரிக்கப்பட்ட, தமிழர்களின் சுயாட்சி ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியலமைப்பே உருவாக்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியின் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

சிவஞானம் சிறிதரன் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, "தமிழ் பேசும் மக்கள் மிகுந்த அவதானமாக இருக்க வேண்டும். இலங்கை நாடானது பல்லின மக்களைக் கொண்டுள்ள ஒரு நாடாகும். நாட்டில் வாழும் சகல இனத்தவர்களும் இந்நாட்டுப் பிரஜைகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டு அவர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளப்பட்ட வகையிலான அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும். இங்கு வாழும் இனத்தவர்களையோ அல்லது ஒரு மதத்தவர்களையோ முதன்மைப்படுத்தி ஏனையவர்களை சிறுமைப்படுத்தி உரிமைகளை மறுக்கின்றதாக அரசியலமைப்பு அமையக்கூடாது.

நாட்டில் வாழும் மக்களது அமைதிக்கும், நிலைத்திருப்புக்கும் சகல இன மக்களையும் கருத்தில்கொண்டு அவர்களுக்குரிய உரிமைகளை வழங்கக்கூடிய வகையில் அமைந்த அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும். ஓர் இனத்தையும் மதத்தையும் முதன்மைப்படுத்தி இன்னொரு இனமக்களை அடக்கி ஒடுக்கி அடிமைப்படுத்த முற்பட்டதன் விளைவே இந்நாட்டின் இனப்பிரச்சினைக்கான முக்கிய காரணமாக அமைந்தது.” என்றுள்ளார்.

0 Responses to தமிழர்களின் சுயாட்சியை உறுதிப்படுத்தும் அரசியலமைப்பு வேண்டும்: சிவஞானம் சிறிதரன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com