Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நல்லிணக்கப் பொறிமுறைக்கான செயலகத்தின் கால எல்லையை நீடிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று புதன்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சரவை இணைப்பேச்சாளரும், அமைச்சருமான தயாசிறி ஜயசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், “இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நல்லிணக்கப் பொறிமுறைக்கான செயலகம் 2015ஆம் ஆண்டிலிருந்து 02 வருடங்களுக்கு அமுலாகும் வகையில் உருவாக்கப்பட்டது.

சம்பந்தப்பட்ட ஏனைய அமைப்பு நிறுவனங்கள், சர்வதேச அமைப்புக்கள் மற்றும் சிவில் சமூக தரப்பை தொடர்புபடுத்தியும் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு வசதிகளை செய்து இந்த அலுவலகம் தனது பணியை நிறைவேற்றி வருகின்றது.

நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்காக பொது மக்கள் மத்தியில் தெளிவுப்படுத்தி திட்டமிட்ட வேலைத்திட்டத்தை கவனத்தில் கொண்டு இந்த அலுவலகத்தின் கால எல்லையை 2019 மார்ச் மாதம் 31ஆம் திகதி வரை நீடிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியது. அதற்கான யோசனையை பிரதம் ரணில் விக்ரமசிங்க முன்வைத்திருந்தார்” என்றுள்ளார்.

0 Responses to நல்லிணக்கப் பொறிமுறைக்கான செயலணியின் கால எல்லை நீடிப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com