பாராளுமன்றத்துக்கு குண்டு வைக்கப்போவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச தெரிவித்த கருத்துக்கு தேசிய சுதந்திர முன்னணி எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.
“குறித்த கருத்து கட்சியின் கருத்தல்ல. அது, விமல் வீரவங்சவின் தனிப்பட்ட கருத்து” என்று என தேசிய சுதந்திர முன்னணி தேசிய அமைப்பாளர் பியசிறி விஜேநாயக்க தெரிவித்துள்ளார்.
கம்பஹா பகுதியில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்து வெளியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
“பாராளுமன்றத்துக்கு குண்டு வைக்கப்போவதாக விமல் வீரவங்ச கூறியிருப்பது தவறானது, நாட்டில் காணப்படும் அமைதியான சூழ்நிலைக்கு இது நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அவரின் கருத்து தொடர்பில் தேசிய சுதந்திர முன்னணி கூடி விரைவில் இது பற்றி ஆராய உள்ளது. நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்ற யோசனையொன்றை நிறைவேற்ற இருக்கின்றோம்.” என்றும் பியசிறி விஜேநாயக்க கூறியுள்ளார்.
கடந்த வாரம் தான் எழுதிய சிறைச்சாலை அனுபவங்கள் தொடர்பான நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய விமல் வீரவங்ச, நாட்டை துண்டாடும் புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்கும் முயற்சியை தடுக்க வேண்டும் எனவும், இதனை தடுக்க பாராளுமன்றத்திற்கு குண்டு வைக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார். குறித்த கருத்திற்கு பலரும் எதிர்ப்பு வெளியிட்டிருந்ததோடு சபாநாயகர் இது தொடர்பில் ஆராய்வதாகவும் அறிவித்திருந்தார்.

0 Responses to பாராளுமன்றத்துக்கு குண்டு வைக்கப்போவதாக விமல் வீரவங்ச தெரிவித்த கருத்துக்கு தேசிய சுதந்திர முன்னணி எதிர்ப்பு!