புதிய அரசியலமைப்பினை கொலையாளிகளே எதிர்த்து வருவதாக நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர குற்றஞ்சாட்டியுள்ளார். 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்கிற நிலைப்பாட்டுக்கு ஆதரவாக 63 இலட்சம் மக்கள் வாக்களித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இவ்வாறான நிலையில், புதிய அரசியலமைப்புக்கு ஆதரவளிப்போரை கொன்றுவிட வேண்டும் என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை, 2020இல் ஜனாதிபதியாக்குவோம் என்று செயற்படுகின்ற குழு கூறியுள்ளது என்றும் மங்கள சமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் உலக நாடுகளின் நம்பிக்கையைப் பெற்றுக்கொண்டு முன்னோக்கி பயணிக்கின்றனர். இதனைச் சகித்துக்கொள்ள முடியாத தரப்பினரே, புதிய அரசியலமைப்பினை உருவாக்குவோரை கொன்றுவிட வேண்டும் என்று கூறுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

0 Responses to கொலையாளிகளே புதிய அரசியலமைப்பினை எதிர்க்கின்றனர்: மங்கள சமரவீர