நவம்பர் 08ஆம் திகதியை கறுப்புப்பண எதிர்ப்பு நாளாக அனுசரிப்போம் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். நவம்பர் 8ஆம் திகதியை ரூபாய் நோட்டு வாபஸ் திட்டம் அறிவிக்கப்பட்ட நாள் என்பதால் இதனை அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெட்லி, வரும் நவம்பர் 8ஆம் திகதியை நாடு முழுவதும் கறுப்பு பணம் எதிர்ப்பு தினமாக பா.ஜ., கொண்டாடும் என்று கூறினார். கறுப்பு பணத்தை ஒழிக்க காங்கிரஸ் கட்சி ஒரு நடவடிக்கை கூட எடுத்தது கிடையாது. மேலும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மிகப்பெரிய பொருளாதார முடிவு என்றும், அதன் மூலம் ரொக்கப்பரிவர்த்தனை குறைக்கப்பட்டு, மின்னணுப் பரிமாற்றம் அதிகரிக்கப்பட்டிருப்பதாகவும் ஜெட்லி கூறினார்.
ரூபாய் நோட்டு வாபஸ் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து எதிர்க்கட்சியினரும் நவம்பர் 8ஆம் திகதியை கறுப்பு தினமாக அனுசரித்த நிலையில், நாடு முழுவதும் போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளனர். அதற்கு பதிலடி தரும் வகையில் அதே நாளை கறுப்புப் பண எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப் போவதாக அருண் ஜெட்லி அறிவித்துள்ளார்.

0 Responses to நவம்பர் 08ஆம் திகதியை கறுப்புப்பண எதிர்ப்பு நாளாக அனுசரிக்க முடிவு: அருண் ஜெட்லி