கடன் வாங்கியவர்களிடம் சட்டத்துக்கு புறம்பாக கந்து வட்டி, மீட்டர் வட்டி என்று அதிக வட்டி கேட்டு வற்புறுத்தினால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தமிழ்நாடு அதீத வட்டி வசூலித்தல் தடை சட்டம் 2003இன் படி நடவடிக்கை எடுக்கும் படி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த 23ஆம் திகதியன்று கந்து வட்டி கொடுமை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டனர். இதில் இரண்டு பெண் குழந்தைகள், அவர்களின் தாய் ஆகியோர் இறந்தனர். இதில் படுகாயமடைந்த இசக்கிமுத்துவும் நேற்று மதியம் இறந்தார்.
இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் தமிழக அரசு அதீத வட்டி வசூலித்தல் தடை சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“பொதுமக்கள் தங்களின் அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்வதற்காக சில சமயங்களில் தனியாரிடம் பணம் கடன் வாங்குகின்றனர். இதனைப் பயன்படுத்தி கடன் கொடுத்தவர்கள் கடன் வாங்கியவர்களை சட்டத்திற்கு புறம்பாக அதிக வட்டி கேட்டு வற்புறுத்துகின்றனர். இத்தகைய அதிக வட்டி வசூலிக்கும் தனியாரிடமிருந்து பொதுமக்களை பாதுகாப்பதற்காக 2003ஆம் ஆண்டு தமிழ்நாடு அதீத வட்டி வசூலித்தல் தடை சட்டம் 2003 என்ற சட்டம் கொண்டு வரப்பட்டது.
இந்தச் சட்டத்தில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:
இந்தச் சட்டத்தின் மூலம் மக்களிடமிருந்து அதிக வட்டி வசூல் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. வட்டிக்கு பணம் பெற்றவர்கள், தாங்கள் பெற்ற தொகையை நீதிமன்றத்தின் மூலம் செலுத்தி பிரச்னைக்கு தீர்வு காண வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதீத வட்டி வசூல் செய்பவர்கள் தங்களிடம் பணம் பெற்றவர்களிடமிருந்து சட்டத்திற்கு புறம்பாக அவர்களுக்கு சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துக்களை கைப்பற்றியிருந்தால், அதனை மீட்டு அவர்களிடமே ஒப்படைக்கச் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதுபோன்று, அதீத வட்டி வசூல் செய்பவர்களிடமிருந்து மக்களை காப்பாற்ற பல அம்சங்கள் இந்த சட்டத்தில் இடம் பெற்றுள்ளன.
தமிழ்நாடு அதீத வட்டி வசூலித்தல் தடை சட்டம் 2003இன் படி அதீத வட்டி சம்பந்தமாக மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களின் மீது உரிய நடவடிக்கையை துரிதமாக எடுக்கும்படி மாவட்ட ஆட்சியர்களுக்கும், மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட பொது மக்கள் எந்தவிதமாக அச்சத்திற்கும் ஆளாகாமல், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரையும், காவல்துறை அதிகாரிகளையும் அணுகலாம். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 2003ஆம் ஆண்டு தமிழ்நாடு அதீத வட்டி வசூலித்தல் தடை சட்டம் 2003 என்ற சட்டம் கொண்டு வரப்பட்டது. வட்டிக்கு பணம் பெற்றவர்கள், தாங்கள் பெற்ற தொகையை நீதிமன்றத்தின் மூலம் செலுத்தி பிரச்னைக்கு தீர்வு காணப்படும்.
கடன்பாக்கிக்காக அசையும் மற்றும் அசையா சொத்துக்களை கைப்பற்றியிருந்தால், அதனை மீட்டு அவர்களிடமே ஒப்படைக்கப்படும். கந்துவட்டி கொடுமைக்கு ஆட்பட்டிருந்தால் உடனே கலெக்டர், போலீஸ் அதிகாரிகளை அணுகி மனு தரலாம்.” என்றுள்ளது.

0 Responses to கந்து வட்டி வாங்கினால் நடவடிக்கை; எடப்பாடி பழனிசாமி உத்தரவு!