மிகப்பெரிய திருடன் பா.ஜ.க.வை தோற்கடிக்க சிறிய திருடன் காங்கிரசை ஆதரிப்போம் என்று பதிதார் அனாமத் அண்டோலன் சமிதி’ (பாஸ்) என்ற அமைப்பின் தலைவரான ஹர்திக் படேல் தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் கணிசமாக வசித்து வரும் படேல் இனத்தவர்கள், தங்களை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து இடஒதுக்கீடு வழங்கக்கோரி கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
‘பதிதார் அனாமத் அண்டோலன் சமிதி’ (பாஸ்) என்ற அமைப்பின் தலைவரான ஹர்திக் படேல் தலைமையில் இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில் இந்த அமைப்பினரின் ஆதரவை பெற பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. குறிப்பாக ஹர்திக் படேலை, காங்கிரசில் சேருமாறு மாநில தலைவர் பரத்சிங் சோலங்கி நேரடியாகவே அழைப்பு விடுத்தார்.
இதற்கிடையே பா.ஜ.க.வில் இணைவதற்கு ரூ.1 கோடி பேரம் பேசப்பட்டதாக ஹர்திக் படேல் ஆதரவாளர் ஒருவர் கூறிய குற்றச்சாட்டால் குஜராத்தில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
குஜராத் மாநிலம் சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆமாதாபாத்தில் நேற்று ஹர்திக் படேலை ஓட்டலில் சந்தித்ததாக உள்ளூர் மீடியாக்களில் செய்தி வெளியாகியது. அதே நேரத்தில் ஹர்திக் படேல் ஓட்டலில் இருந்தது உறுதி செய்யப்பட்டது, ஆனால் இருவரும் சந்தித்தனர் என்ற செய்தி மறுக்கப்பட்டது.
தொடக்கத்தில் இருந்தே ஹர்திக் படேல் ஆதரவு காங்கிரசுக்கு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் மிகப்பெரிய திருடன் பா.ஜ.க.வை தோற்கடிக்க சிறிய திருடன் காங்கிரசை நாங்கள் ஆதரிப்போம் என ஹர்திக் படேல் கூறிஉள்ளார்.
வடக்கு குஜராத்தில் மண்டாலில் நடைபெற்ற பேரணியில் பேசிய ஹர்திக் படேல், “காங்கிரஸ் கட்சியின் அழைப்பை ஏற்று நான் ஞாயிறு காலை மூன்று மணியளவில் ஓட்டலுக்கு சென்றேன். காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி கெலட்டை (முன்னார் ராஜஸ்தான் முதல்-மந்திரி) சந்தித்து பேசினேன். நீண்ட நேரமாகியதால் ஓட்டலில் தங்க முடிவு செய்தேன். ஆனால் அவர்கள் (பாரதீய ஜனதா) குஜராத்தில் உள்ள அனைத்து அவர்களுடையது போன்று சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு உள்ளனர்,” என்றார். மீடியாக்கள் குவிந்ததன் காரணமாகவே என்னால் ஓட்டலில் இருந்து விரைவாக வெளியேற முடியவில்லை எனவும் குறிப்பிட்டு உள்ளார்.
ராகுல் காந்தியை நான் சந்தித்து பேசவில்லை, ஆனால் நான் பேசியதாக மீடியாக்கள் கூறிவிட்டன. பிரதமர் மோடியை போன்று நள்ளிரவில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப்பை நான் சந்திக்கவில்லை என்றார்.
காங்கிரஸ் கட்சியை திருடன் என கூறிஉள்ள ஹர்திக் படேல் பாரதீய ஜனதாவை மிகப்பெரிய திருடன் என விமர்சனம் செய்து உள்ளார்.
“காங்கிரஸ் ஒரு திருடன்தான், ஆனால் பாரதீய ஜனதா மிகப்பெரிய திருடன். மிகப்பெரிய திருடனை தோற்கடிக்க வேண்டும் என்றால், நாம் சிறிய திருடனுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும், அதனை கொடுப்போம். பொறுமையாக இருங்கள், உடனடியாக ஆதரவு கொடுக்காதீர்கள்,” எனவும் ஹர்திக் படேல் பேசிஉள்ளார்.

0 Responses to பெரிய திருடன் பா.ஜ.க.வை தோற்கடிக்க சிறிய திருடன் காங்கிரஸை ஆதரிப்போம்: ஹர்திக் படேல்