அநுராதபுரம் சிறைச்சாலையில் 20 நாட்களுக்கும் மேலாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கையெழுத்துப் போராட்டமொன்றை இன்று திங்கட்கிழமை ஆரம்பித்துள்ளனர்.
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்தக் கையெழுத்துப் போராட்டம் வடக்கு மாகாணம் முழுவதும் மாணவர்களால் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதற்கமைய, யாழ்ப்பாணத்தின் பல்வேறு இடங்களிலும் மாணவர்களால் கையெழுத்துகள் பெறப்பட்டன. இதேபோன்று, கிழக்கு மாகாணத்திலும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக மாணவர்களால் இக்கையெழுத்துப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துள்ள இப்போராட்டத்துக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வேண்டியுள்ளது.
இவ்வாறு பெறப்படும் கையெழுத்துகளை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளன.

0 Responses to தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கையெழுத்துப் போராட்டம்!