“இராணுவத்தில் சேவையாற்றிய அதிகாரிகளோ அல்லது ஏனையவர்களோ ஓய்வுபெற்றபின்னர் இராணுவத்தை விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவ்வாறு விமர்சிப்பது பாரிய குற்றம் என்றே நான் கருதுகிறேன்.” என்று இராணுவத்தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
இராணுவம் தொடர்பில் விமர்சனங்களோ அல்லது முரண்பாடுகளோ இருக்குமாயின், அவர்கள் இராணுவ சேவையில் இருந்த போதே அவற்றை தீர்த்து வைத்திருக்க வேண்டும் என்றும் இராணுவத்தளபதி கூறியுள்ளார்.
தேசிய மரம் நடுகை மாதத்தை முன்னிட்டு வெலிகந்த இராணுவ முகாமில், இடம்பெற்ற மரம் நடுகை வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற அதிகாரிகள் இராணுவத்தை விமர்சிக்க முடியாது: மகேஷ் சேனாநாயக்க