நமது பூமியில் வசிக்கும் அனைத்து உயிரினங்களுக்கும் தவிர்க்க முடியாத இரு இயல்புகளில் ஒன்று வயதாதல் மற்றும் மரணம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால் உயிரியல் ரீதியிலான ஆய்வுகள் மூலம் நாம் வயதாவதைத் தடுப்பதற்கோ அல்லது மெதுவாக்குவதற்கோ வாய்ப்பு உள்ளது என அண்மைக் காலமாக விஞ்ஞானிகள் நம்பி வந்தனர்.
ஆனால் தற்போது அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக் கழக நிபுணர்கள் முற்றிலும் மாறுபட்ட கருத்தைத் தெரிவித்துள்ளனர். அதாவது மனித இனம் எப்போதும் இளமையுடன் இருப்பதற்கு மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளும் வீண் என்றும் வயதாவதைத் தவிர்க்க இயலாது என்பதற்குக் கணித ரீதியான சான்று உள்ளது எனவும் இவர்கள் கூறுகின்றனர். இதனால் எப்போதும் இளமையுடன் இருத்தல் அல்லது சாஸ்வதம் என்பது வெறும் விஞ்ஞானப் புனை கதைகளிலும் கற்பனையிலும் தான் சாத்தியம் என்கின்றனர் இவர்கள். மனிதன் முதுமையை அடைவது அல்லது வயதாவதை மிகவும் மெதுவாக்குவது தொடர்பிலான ஆய்வு மற்றும் தொழிற் துறைகள் இன்றைய காலத்தில் பில்லியன் டாலர்கள் பெறுமதியானவை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் முதுமையை அடைவதை அல்லது மரணத்தை தவிர்ப்பதற்கு எந்தவொரு மருந்தோ சிகிச்சையோ உதவ முடியாது எனவும் ஏனெனில் கணித ரீதியாக இதற்கு மார்க்கமே இல்லை என்றும் அரிசோனா விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதாவது நாம் முதுமையை நெருங்கும் போது எமது உடலில் உள்ள சில கலங்கள் சிதைவடைந்து அவற்றின் இயக்கம் மெதுவாகி எமது உடல் உறுப்புக்கள் முறையாகச் செயற்பட முடியாத நிலை தோன்றுமாம். ஆனால் இதற்கு எதிர்த் திசையில் எமது பிற உடல் கலங்களின் இயக்க வேகம் அதிகமானால் அது புற்று நோய்க்கு (cancer) இட்டுச் செல்லுமாம். அதே திசையில் இந்த புற்று நோய்க் கலங்களின் இயக்கத்தைத் தடுத்து நிறுத்தினால் பக்க விளைவாக மிக வேகமாக நாம் முதுமையை அடையவும் நேரிடுமாம்.
பதிலாக முதுமைக்குக் காரணமாகும் சிதைவடையும் கலங்களின் இயக்க வேகத்தை அதிகரித்தால் பதிலுக்கு அவையும் புற்று நோயைத் தூண்டுமாம். அதனால் இதில் எந்தவொரு வழிமுறையிலும் முதுமையை நாம் தவிர்க்க முடியாது என்கின்றனர் விஞ்ஞானிகள்.

0 Responses to வயதாவதை கணித ரீதியாகவும் தவிர்க்க முடியாதாம்! : புதிய ஆய்வில் தகவல்