Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்தியா மற்றும் சீன எல்லையூடாகப் பாய்ந்து செல்லும் பிரம்மாபுத்ரா நதிக்குக் குறுக்கே உலகின் மிக நீளமான 1000 km தூரம் கொண்ட சுரங்கப் பாதையை அமைக்கும் திட்டமானது அந்நதி நீரைச் சுரண்டுவதற்காக அல்ல என சீனா தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஹொங்கொங்கில் இருந்து வெளியாகும் தென் சீனாவின் காலைப் பத்திரிகையில் வெளியான செய்தியில் கிட்டத்தட்ட 1000 இற்கும் அதிகமான சீனப் பொறியியலாளர்கள் இணைந்து இந்த சுரங்கப் பாதையை அமைப்பதற்கான தொழிநுட்பங்கள் குறித்து பரிசோதித்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் தான் இது ஒரு தவறான அறிக்கை எனவும் பிரம்மபுத்ரா ஆற்றில் இருந்து சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்துக்குத் தண்ணீரை திசை திருப்புவதற்காகத் தான் 1000 Km நீளத்தில் புதிய சுரங்கப் பாதை அமைக்கத் தாம் திட்டமிட்டுள்ளதாக வெளியான செய்திகளை சீன அரசு மறுத்துள்ளது. முன்னதாக வெளியான தகவலில் சீனாவின் வறட்சியான ஜின்ஜியாங் மாகாணத்தில் உள்ள டக்லமக்கான் பாலைவனத்தில் வசிக்கும் மக்கள் பயன் பெறும் விதத்தில் திபேத்தினூடாகச் செல்லும் 1000 Km நீளமான புதிய சுரங்கம் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகளை சீனப் பொறியியலாளர்கள் ஆய்வு செய்து வருவதாகக் கூறப்பட்டிருந்தது.

தெற்கு திபேத்தில் புராங் பகுதியில் உற்பத்தியாகி இந்தியாவின் வடகிழக்கே அருணாச்சலப் பிரதேச மாநில வழியாகச் சென்று கடலில் கலக்க முன்னர் வங்காளதேச மக்களுக்கும் இந்த பிரம்ம புத்ரா நதி பயன்படுகின்றது. இந்நிலையில் சீன அரசின் புதிய சுரங்கத் திட்டம் இந்த நாட்டு மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது என்பதுடன் சுரங்கப் பாதையை அமைக்கும் போது மலைகள் குடையப் பட வேண்டி இருப்பதால் சுற்றுச் சூழல் பாதிப்பும் ஏற்படும் எனவும் கூறப்படுகின்றது.

சீனாவின் இந்த செயற்திட்டம் மிக நீண்ட காலம் எடுக்கும் என்பதுடன் கிட்டத்தட்ட 150 பில்லியன் டாலர் செலவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தான் சீன வெளியுறவுத் துறை அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்யிங் இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் ஹொங்கொங் பத்திரிகையில் வெளியான தகவல் உண்மையல்ல என்றும் எல்லைகளுக்கு இடையே நதி பங்கீட்டு விவகாரங்களில் சீனா எப்போதும் பூரண ஒத்துழைப்பை நல்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

0 Responses to பிரம்மபுத்ரா நதி நீரை சுரண்ட 1000 Km நீளமான சுரங்கம் அமைக்கவில்லை! : சீனா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com