“நல்ல தமிழ்நாட்டை உருவாக்குவது எனது கனவு. மக்கள் பிரச்சினைகளை தெரிந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டிருக்கிறேன். அனைத்து தரப்பு மக்களையும் தெரிந்து கொள்வதற்குதான் இந்த பயணம்.” என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தனது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை தி,நகரில் #MaiamWhistle என்ற பெயரில் புதிய செல்பேசி செயலியை நடிகர் கமல்ஹாசன் அறிமுக செய்தார். #theditheerpomvaa #maiamwhistle #virtuoscycles என்ற 3 ஹேஷ்டேக்-களையும் அவர் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
அந்த நிகழ்வில் கமல்ஹாசன் பேசியுள்ளதாவது, “உண்மைகளை மட்டுமே அனைவராலும் எப்போதும் பேச முடியாததாக உள்ளது. நல்ல தமிழ்நாட்டை உருவாக்குவது எனது கனவு. மக்கள் பிரச்சினைகளை தெரிந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டிருக்கிறேன். அனைத்து தரப்பு மக்களையும் தெரிந்து கொள்வதற்குதான் இந்த பயணம்.
தவறான ஆட்களிடம் தானத்தை கொடுப்பது கூட தவறுதான். நல்லதை செய்தால் மட்டும் போதாது அதை சரியான மக்களுக்கு சரியான நேரத்தில் செய்ய வேண்டும். தமிழகத்தை இயக்க வேண்டிய சக்கரங்கள் தற்போது பழுதடைந்துள்ளது, பழுதை சரிசெய்ய மக்கள் ஒன்று திரள வேண்டும். அக்கிரமங்களுக்கு எதிராக தரப்படும் குரல் குறைந்துவிட்டதாகக் கருதுகிறேன்.
கட்சியின் பெயரை அறிவிக்க இப்போது அவசியமில்லை; அவசரமில்லை. அரசியல் கட்சித் தொடங்குவதற்கான ஆயத்த பணிகளை தொடங்கி இருக்கிறேன். அஸ்திவாரம் பலமாக இருக்க வேண்டும் என காத்து கொண்டு இருக்கிறேன்.சினிமா எடுப்பதற்கே 6 மாத முன்னேற்பாடுகள் செய்பவன் நான்; அரசியல் அதைவிடப் பெரிய பணி.நான் அரசியல் பொறுப்புக்கு வந்தால், என்னை நோக்கியும் கேள்விகள் எழுப்பப்படலாம்.
மக்கள் பிரச்னைகளை பற்றிப் பேச #theditheerpomvaa #maiamwhistle #virtuouscycles என்ற ஹேஷ்டேக்கில் பேசலாம். புதிய செல்போன் செயலிக்கு "மையம் விசில்" என பெயிரிடப்பட்டுள்ளது, நியாயத்திற்காக குரல் எழுப்பும் கருவி "மையம் விசில்". ” என்றுள்ளார்.

0 Responses to நல்ல தமிழ்நாட்டை உருவாக்குவது எனது கனவு: கமல்ஹாசன்