பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசாங்கம் முன்னெடுத்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் இந்தியப் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குற்றஞ்சாட்டியுள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கூட்டமொன்றில் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ரூ.500 மற்றும் ரூ.1000 செல்லாது என்ற மோடி அறிவித்த நவம்பர் 8ஆம் தேதி கருப்பு நாள் என்றும், பாஜக அரசின் மோசமான நிதிக்கொள்கை நாட்டு மக்கள் மீது திணிக்கப்பட்ட நாள் என்றும் அவர் கூறியுள்ளார். நாட்டின் 86% ரொக்கப்பணத்தை அரசு எடுத்தது உலகில் எங்கும் நடந்தது இல்லை என்றும் மன்மோகன் கூறியுள்ளார்.
பணமில்லா வர்த்தகம் நடத்த பணம் மதிப்பு இழப்பு நடவடிக்கை தோல்வி அடைந்துவிட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் பண மதிப்பு இழப்பு அறிவிப்பு நாட்டை கொள்ளையடிக்கும் செயல் சென்றும் அவர் கூறியுள்ளார். பணம் மதிப்பு இழப்பு, ஜி.எஸ்.டி வரி ஆகியவை சிறுதொழிலை அழித்துவிட்டது என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

0 Responses to பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் இந்தியப் பொருளாதாரம் பாதிப்பு: மன்மோகன் சிங்