Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையின் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பிலும், போருக்குப் பின்னரான நல்லிணக்கச் செயற்பாடுகள் தொடர்பிலும் அமெரிக்கா தீவிர கவனம் செலுத்தி வருவதாக அரசியல் விவகாரங்களுக்கான ஐக்கிய அமெரிக்காவின் உதவிச் செயலாளர் தோமஸ் செனன் தெரிவித்துள்ளார்.

“2015இல் ஏற்படுத்தப்பட்ட நல்லாட்சி அரசாங்கத்தின் மூலம், அனைத்து இன மக்களுக்குமான சுதந்திரத்தை உறுதிபடுத்தியுள்ளதென நினைக்கிறோம். எனினும், போருக்கு பின்னரான அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பில் இலங்கை மேற்கொள்ள வேண்டிய செயற்பாடுகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் அமெரிக்கா ஆலோசனை வழங்கி வருகின்றது.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உத்தியோகபூர்வ பயணமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள அரசியல் விவகாரங்களுக்கான ஐக்கிய அமெரிக்காவின் உதவிச் செயலாளர் தோமஸ் செனன், வெளிவிவகார அமைச்சில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசும் போதே இதனைக் கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, "நல்லிணக்கம் பொது பாதுகாப்பு அபிவிருத்தி செயன்முறை தொடர்பில் ஆராய இலங்கை விஜயம் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. இது எனது 2வது இலங்கை பயணமாகும். இவ்விஜயத்தின்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நிதி அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோருடனும் பேசியிருந்தேன். இலங்கையில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்கள், நல்லிணக்கச் செயற்பாடுகள், கடற் பாதுகாப்பு, வெளிநாட்டுக் கொள்கை போன்ற பல விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்திருந்தோம். இலங்கையின் அபிவிருத்திக்காகவும் பாதுகாப்பு நடவடிக்கைக்காகவும் 21 மில்லியன் டொலர்களை வழங்கியிருந்தோம்.

போருக்குப் பின்னரான காலப்பகுதியில் இலங்கையில் ஏற்படுத்தப்பட்ட நல்லிணக்க செயற்பாடுகள் மற்றும் நீதி பொறிமுறை தொடர்பில் அமெரிக்கா அதிகம் கவனம் செலுத்துகிறது. இது பல நாடுகளுக்கு முன்னுதாரணமான விடயமாக காணப்படுகின்றது.

இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் நல்லிணக்கம், சட்ட விதிமுறை மற்றும் நீதித்துறை சீர்திருத்த முயற்சிகளுக்கிணையாக, இருதரப்பு பாதுகாப்பு பிரிவு ஒத்துழைப்பும் தொடரப்படவுள்ளது. இதில் கண்ணிவெடிகளை அகற்றுதல், கூட்டு இராணுவ ஈடுபாடுகள், இலங்கை அதிகாரிகளுக்கான மனித உரிமைகள் பயிற்சி, கப்பல்கள் மற்றும் இராணுவ அதிகாரிகளின் வருகை ஆகியவற்றுக்கான ஐக்கிய அமெரிக்காவின் ஆதரவு ஆகியவை உள்ளடக்கப்பட்டுள்ளன.

உலகளாவிய பாதுகாப்பு பெரும் அச்சுறுத்தலாகமாறியுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத குழுக்கள் தொடர்பான தமது கரிசனையை இலங்கையும், ஐக்கிய அமெரிக்காவும் பகிர்ந்து கொண்டுள்ளன.

வடகொரியாவின் சட்ட விரோதமான மற்றும் ஏவுகணைத் திட்டங்களினால் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்தும், வட கொரியா மீது அனைத்து ஐக்கிய நாடுகள் உறுப்பினர்களும் அழுத்தம் செலுத்த வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும், இது தொடர்பாக ஐக்கிய நாபுகள் பாதுகாப்புச்சபை தீர்மானங்களின் முழுமையான அமுல்படுத்தல் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளன.“ என்றுள்ளார்.

0 Responses to இலங்கையின் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் அமெரிக்கா தீவிர கவனம்: தோமஸ் செனன்

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com