Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தற்போது 4 டன் எடை கொண்ட செய்மதிகளை உயர் புவிவட்ட ஒழுக்கிலும் 8 டன் எடை கொண்ட செய்மதிகளை தாழ்ந்த புவிவட்ட ஒழுக்கிலும் நிறுவும் திறனைப் பெற்றுள்ளது.

இவற்றை விட அதிக எடை கொண்ட இந்தியாவின் செய்மதிகள் தென்னமெரிக்காவில் உள்ள ஏரியன் ஏவுதளத்தில் இருந்து தான் செலுத்தப் பட்டு வருகின்றன.

இந்நிலையில் உலகில் அதிக எடை கொண்ட செய்மதிகளை விண்ணில் செலுத்துவதில் முன்னணியில் உள்ள எலொன் முஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி நிறுவனத்துக்கு இணையாக நாமும் முன்னேற்றம் காண முடியும் என இஸ்ரோ தலைவர் கே. சிவன் தெரிவித்துள்ளார். இன்றைய நிலையில் உலகின் முன்னணி விண்வெளி ஓட நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸின் மூலம் 60 டன் எடை கொண்ட செயற்கைக் கோள்கள் வரை விண்ணில் செலுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஸ்பேஸ் எக்ஸின் குறித்த அதி நிறை செயற்கைக் கோள்களைத் தாங்கிச் செல்லும் ராக்கெட் டிசைன்கள் இஸ்ரோ வசமும் உள்ள போதும் மிகச் சிக்கலான அந்த ராக்கெட்டுக்களைத் தயாரிக்கும் செமி கிரையோஜெனிக் என்ற பொறிமுறை எம்மிடம் இல்லை என கே.சிவன் கூறுகின்றார். ஆனாலும் இதற்கான ஆராய்ச்சியில் முதற் கட்டத்தில் தற்போது இஸ்ரோ உள்ளது.

இதேவேளை எதிர்காலத்தில் மனிதனை விண்ணில் சுமந்து செல்ல இஸ்ரோவுக்கு இந்தத் தொழிநுட்பம் மிகவும் அவசியமானது என்றும் கே.சிவன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to அதிக நிறை கொண்ட செய்மதிகளை விண்ணில் ஏவுவதில் உலகில் முன்னிலை வகிக்க இஸ்ரோ முயற்சி

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com