Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நேற்று 08.11.2012 மாலை பிரான்சின் தலைநகரத்தில் தமிழ் மக்களின் விடுதலைக்காக நீண்ட கால  மனிதநேய செயற்பாட்டாலாராக நல்மதிப்புடன் விளங்கிய திரு பரிதி (நடராஜா மதீந்திரன்) அவர்கள் சிங்கள  அரசின் திட்டமிட்ட நயவஞ்சக சூழ்ச்சியால் மனிதநேயம் அற்ற முறையில் சுட்டுக்கொல்லப்பட்டதை அறிந்து நாம் எமது ஆழ்ந்த கவலை கொள்வதோடு இச் செயலை மிக வன்மையாக கண்டிக்கின்றோம் .

முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான எமது தாயக உறவுகளை கொன்று குவித்து இன்று மூன்று  வருடங்கள் ஆகி இன்றும் என்றும் இல்லாதவாறு மிக கொடுமையான நிலைமைகளில் எமது மக்கள் அங்கே எவ்வித சுதந்திரம் அற்று வாழ்கின்றனர் . சிங்கள பேரினவாதம் இன்றும் ஈழத்தமிழ் மக்களின் தாயகத்தை தொடர்ந்தும்  அபகரிப்பதோடு , மிக மோசமாக ராணுவமயமாக்கல் மேற்கொண்டு வருகின்றது .

தாயக மக்களின் குரல் நசுக்கப்பட்டு வரும் நிலையில் புலம்பெயர் நாடுகளில் எத்தனையோ சாத்வீக போராட்டங்களில் தமிழ் மக்கள் முன்னெடுத்து வருகின்றனர் .அவ் வகையில் மாவீரர் பரிதி அவர்கள் கடந்த காலங்களில் ஜனநாயக மக்கள் போராட்டத்தை மிக வலுப்படுத்தி சிங்கள அரசு ஈழத்தமிழர் மீது மேற்கொண்ட இனவழிப்பை அனைத்துலக சமூகத்திடம் கொண்டுசெல்லும் வகையில் நீதிவேண்டிய பாரிய கவனயீர்ப்பு நிகழ்வுகளை ஒருகிணைத்ததை  நாம் நன்கறிவோம் .


புலம்பெயர் தமிழ் மக்களாகிய  நாம் எந்த அச்சுறுத்தலையும் தாண்டி எமது செயற்பாடுகளை இன்னமும் வீச்சுடனும் ஓர்மத்துடனும் செய்து தமிழர் மீது நடாத்தப்பட்டுக்கொண்டிருக்கும் இனப்படுகொலையைச் சர்வதேச மட்டத்தில் எடுத்துச்சென்று மாவீரர்களினதும் தமிழ் மக்களினதும் இலட்சியத்தை அடையும்வரை அயராது செயற்படுவோமென உறுதி எடுத்துக்கொள்வதுடன் சிறிலங்கா அரசின் எல்லை மீறிய இப்படியான செயற்பாடுகளை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

அத்தோடு இப்படுகொலையில் சம்பந்தப்பட்டவர்களை பிரான்ஸ் காவல்துறை உடனடியாகக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தவேண்டுமெனப் பிரான்ஸ் காவல்துறையைக் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை வேண்டிநிற்கிறது.

அத்தோடு எமது எதிர்கால செல்வங்களான இளையோர்களை அரசியல் வேலைத்திட்டங்களில் ஊக்கிவித்து காலத்தின் தேவை அறிந்து தனிகரில்லா சேவை ஆற்றிய மாவீரர் பரிதி அவர்களுக்கு நாம் எமது வீரவணக்கத்தை செலுத்துவதோடு, மாவீரர் அவரை  இழந்து நிற்கும் அவர் குடும்பத்தினர்க்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம் .



தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் !!!


கனடியத்தமிழர் தேசிய அவை                                                       
நோர்வே ஈழத்தமிழர்  அவை                                                        
டென்மார்க் ஈழத்தமிழர் பேரவை                                                               
தமிழீழ மக்கள் பேரவை – பிரான்சு                                                         
 இத்தாலி ஈழத்தமிழர் மக்களவை                                                           
ஹோல்லாந்து ஈழத்தமிழர் பேரவை                                                           
 சுவிஸ் ஈழத்தமிழரவை                                                                      
யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை                                                         
தமிழர் பண்பாட்டு கழகம் - பெல்ஜியம்  
தமிழர் தேசிய அவை - நியூசீலந்து    

செயலகம் - அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை

0 Responses to எல்லைகள் தாண்டிய சிங்கள அரசின் பேரினவாதத்தை வன்மையாக கண்டிக்கின்றோம் - அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com