மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை வரிப் பயங்கரவாதத்துக்கு சமமானது என பா.ஜ.க அதிருப்தி தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான யஷ்வந்த் சின்கா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது, “கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது வருமான வரித்துறை அதிகாரிகள் கெடுபிடியுடன் நடந்து கொள்வதாக பா.ஜ.க குற்றம் சாட்டியது. அதை வரி பயங்கரவாதம் என அக்கட்சி தலைவர்கள் விமர்சித்தனர்.
உண்மையில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் வரி பயங்கரவாதத்துக்கு வித்திட்டது பா.ஜ.க அரசு தான். பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர் சுமார் 18 இலட்சம் வழக்குகளை வருமானவரித்துறையினர் பதிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இத்தனை வழக்குகளை விசாரிப்பதற்கு வருமானவரித்துறையில் வசதிகள் உள்ளனவா? இந்த வழக்குகளின் விசாரணை முடிவதற்கு எத்தனை ஆண்டுகள் ஆகும். பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் வெற்றி பெற்றுவிட்டதாக கூறிவரும் மத்திய அரசு மக்களின் நம்பிக்கையை பெறுவதற்காக அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் மக்களவை தேர்தல் வரை வருமான வரித்துறை விசாரணையை முடிக்காமல் வைத்திருக்கும். பண மதிப்பிழப்பு நடவடிக்கை எதிர்பார்க்கப்பட்ட எந்த நோக்கத்தையும் நிறைவேற்றவில்லை.
எனினும் கருப்பு பணத்துக்கு எதிரான நடவடிக்கை என்ற கருத்தில் மத்திய அரசு வெற்றி பெற்றுவிட்டது. 16ம் நூற்றாண்டில் டெல்லியை ஆண்ட முகமது பின் துக்ளக் அப்போது புழக்கத்தில் இருந்த பணத்தை மதிப்பிழக்க செய்தார். 500 ஆண்டுகளுக்கு பிறகு அந்த அரசர் செய்த தவறை தற்போது அதிகாரத்தில் இருக்கும் ஒருவர் செய்திருக்கிறார்.” என்றுள்ளார்.

0 Responses to பணமதிப்பிழப்பு நடவடிக்கை வரிப் பயங்கரவாதத்துக்கு நிகரானது: யஷ்வந்த் சின்கா