இலங்கையின் போர் குற்றம் தொடர்பில், முறையானதும், சுதந்திரமானதுமான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
இந்த விசாரணைகளின் போது, நேரடியாக பாதிக்கப்பட்டு, தற்போது முகாம்களில் அரசினால் தடுத்து வைக்கபட்டுள்ளவர்களின் நேர்காணல்களும் இடம்பெற வேண்டும் என தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் மோதல் பகுதிகளில் மருத்துவ பணி செய்து, பிழையான தகவல் வெளியிட்டதாக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள வைத்தியர்களை அச்சுறுத்தியே அவர்கள் வெளியிட்ட பலியானவர்களின் எண்ணிக்கையை மீள மாற்றி வெளியிட வைத்துள்ளதாக மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
அரசாங்கம் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பலரை, துன்புறுத்தியும், அச்சுறுத்தியும் பலவந்தமாக அரசாங்கத்துக்கு சார்பான செவ்விகளை வழங்க செய்வதாகவும் மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
தடுத்து வைக்கப்பட்டுள்ள வைத்தியர்கள் தொடர்பில் சர்வதேச மன்னிப்புச் சபையினால் நேற்று விடுக்கப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைத்தியர்கள் அச்சுறுத்தப்பட்டு இவ்வாறு பொய்யான தகவலை வெளியிட செய்ய அரசாங்கம் மேற்கொண்டுள்ள முனைப்பு கண்டனத்துக்கு உரியது எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள வைத்தியர்கள் மோதல் இடம்பெற்ற பகுதிகளில் காயமடைந்த மக்களுக்கு மருத்துவ உதவிகளையே செய்துள்ளனர்.
எனவே அவர்கள் போற்றப்பட வேண்டியவர்களே தவிர தண்டிக்கப்பட வேண்டியவர்கள் இல்லை என மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
வைத்தியர்கள் அச்சுறுத்தப்பட்டு பொய்யான தகவலை வெளியிட செய்ய அரசாங்கம் மேற்கொண்டுள்ள முனைப்பு கண்டனத்துக்கு உரியது – சர்வதேச மன்னிப்புச் சபை
பதிந்தவர்:
தம்பியன்
12 July 2009
0 Responses to வைத்தியர்கள் அச்சுறுத்தப்பட்டு பொய்யான தகவலை வெளியிட செய்ய அரசாங்கம் மேற்கொண்டுள்ள முனைப்பு கண்டனத்துக்கு உரியது – சர்வதேச மன்னிப்புச் சபை