நாட்டிலுள்ள சகல மக்களையும் ஒன்றினைக்கும் செயற்பாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னின்று செயற்படுவதால், அவருக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற பிரேரணையொன்றின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இரா.சம்பந்தன் கூறியுள்ளதாவது, “ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செல்லும் இடமெல்லாம் அவருக்கு மரியாதை கிடைக்கின்றது. புதிய அரசாங்கத்தின் கொள்கைகள் அணுகுமுறைகள், நாட்டில் சகல மக்களையும் ஒன்றாக இணைக்க ஜனாதிபதி எடுக்கும் முயற்சிகளாலேயே அவருக்கு சர்வதேசத்தில் அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்த நிலையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும். அதுவே எமக்குள்ள பொறுப்பாகும்.” என்றுள்ளார்.

0 Responses to நாட்டு மக்களை ஒன்றினைக்கும் செயற்பாட்டால் மைத்திரிக்கு சர்வதேச அங்கீகாரம்: சம்பந்தன்