இலங்கையின் இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் விசாரணை அறிக்கை மேலும் ஆறு மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள விடயம் கவலையையோ, மகிழ்ச்சியையோ அளிக்கவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் புதிய அரசாங்கம் இந்த விடயத்தில் ஒரு நம்பகத்தன்மை வாய்ந்த விசாரணை நடத்துவதாக உறுதியளித்து, விசாரணை அறிக்கையை வெளியிடுவதை ஒத்திவைக்கக் கோரியிருந்ததை அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த விசாரணை அறிக்கை ஒத்திவைப்பு என்பது, இந்த இடைப்பட்ட காலத்தில் மேலும் புதிய விடயங்களை விசாரணைக் குழுவின் முன் வைக்கவும் வழிவகுக்கலாம். எனவே இந்த காலகட்டத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையுடன் ஒத்துழைப்பது அவசியம் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to ஐ.நா. விசாரணை அறிக்கை ஒத்திவைப்பு; கவலையோ, மகிழ்ச்சியோ அளிக்கவில்லை: சம்பந்தன்