நாடு மிகப் பெரிய பொருளாதார நெருக்கடி நிலையை எதிர்கொண்டுள்ளதாக சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச வெளிப்படையாக அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்திற்கே கடிதம் மூலம் இந்த விடயத்தை மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்:
இலங்கை மிகப் பெரிய பொருளாதார நெருக்கடி நிலையை எதிர்கொண்டுள்ளது. உலகின் பொருளாதார வீழ்ச்சியால் நாம் செய்யாத குற்றத்திற்கு தண்டனையை அனுபவிக்க நேரிட்டுள்ளது.
அபிவிருத்திச் செயற்பாடுகளும் பாரிய சவால்களை எதிர்கொண்டுள்ளது. ஏற்றுமதித்துறையும் மிக மோசமான நிலையை அடைந்துள்ளது. நாட்டின் கைத்துதொழித்துறையும் நம்பிக்கை இழந்துள்ளது.
இந்த நிலை தொடருமானால் நாட்டின் உள்நாட்டு பொருளாதார வளர்ச்சி மற்றும் வெளிநாட்டு முதலீடுகளும் வீழ்ச்சியடையும்.
நாட்டில் வெளிநாட்டு முதலீடுகள், அந்நியச் செலவாணிகள் மிகக் குறைவடைந்துள்ளன.
எனவே தேசிய மேமிப்பு மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் வீழ்ச்சியடைவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
நாடு மிகப் பெரிய பொருளாதார நெருக்கடி எதிர்கொண்டுள்ளது - மகிந்த ராஜபக்ச
பதிந்தவர்:
தம்பியன்
19 July 2009
0 Responses to நாடு மிகப் பெரிய பொருளாதார நெருக்கடி எதிர்கொண்டுள்ளது - மகிந்த ராஜபக்ச