"தமிழ் மக்கள் அற்ப சொற்ப ஆசைகளுக்கு விலை போகக் கூடாது. தமிழ்த் தேசியத்திற்காகக் குரல் கொடுக்க வேண்டும்" என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளரும் டெலோ இயக்கத் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் நேற்றிரவு மன்னார் பள்ளிமுனையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் தெரிவித்தார்.அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
"தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக அமைச்சர் ஒருவரினால் சைக்கிள்களும், தையல் மெஷின்களும் வழங்கப்பட்டு வருகின்றன.
இவ்வளவு காலமும் சொல்லொணாத் துயரங்களுக்கு முகம் கொடுத்து வந்த எம் உறவுகளுக்கு எவ்வித செய்யாத அமைச்சர், இன்று எந்த முகத்தை வைத்துக் கொண்டு எம் மக்கள் மத்தியில் வாக்கு கேட்டு வந்திருக்கின்றார்?
வன்னியில் இடம்பெற்ற மோதல்களின் போது எம் மக்களுக்கு குரல் கொடுக்காத அமைச்சர், அதனை பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கை என்று கூறி வந்தவர். இன்று அம்மக்களிடம் வாக்குக் கேட்டுப் புறப்பட்டுள்ளார்.
தமிழ் இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்புப் பெற்றுத் தருவதாகக் கூறி, அவர்களைத் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி வருகின்றார். குறிப்பாகத் தமிழ் யுவதிகளும் தேர்தல் பிரசாரப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால் இந்த யுவதிகள் சமுதாயத்தில் பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்" என்றார்.



0 Responses to தமிழ் மக்கள் அற்பசொற்ப ஆசைகளுக்கு விலை போகக் கூடாது: அடைக்கலநாதன்