Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

விடுதலைப் புலிகளுடனான இராணுவப் போர் முடிந்து விட்டாலும் கூட முழுமையாக அவர்கள் தோற்கடிக்கப்பட்டு விட்டதாக கருத முடியாது என்று கெஹலிய ரம்புகவெல கூறியுள்ளார்.

கெஹலிய ரம்புகவெலஅளித்துள்ள தொலைக்காட்சிப் பேட்டியில் கூறியுள்ளதாவது:

விடுதலைப்புலிகள் முழுமையாக தோற்கடிக்கப்பட்டு விட்டதாக நாம் கருத முடியாது. தற்போது விடுதலைப் புலிகள் வெளிநாடுகளில் செயற்படுகின்றனர். சூசை ஒரு சமயத்தில் குறிப்பிட்டார் "உண்மையான யுத்தம் தரையில் அல்ல கடலிலேயே இருப்பதாக". எனினும், அவை அனைத்தும் தற்போது வெற்றி கொள்ளப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக வெள்ளையர்களும் செயற்பட்டார்கள். உலகில் எந்தவொரு அமைப்பிற்கும் இல்லாத பலத்தை விடுதலைப் புலிகள் கொண்டிருந்தார்கள். அவர்கள் விமானம் வைத்திருந்தார்கள். எனினும், அந்த பலத்தை சிறீலங்காப் படைவீரா்கள் முறியடித்து விட்டனர்.

விடுதலைப் புலிகள் மீண்டும் எழுவதற்கான வாய்ப்புக்கள் மிகவும் குறைந்த அளவிலேயே உள்ளது. போர் முடிவடைந்தாலும் அதன் மாயை இன்னமும் முடியவில்லை. கரையோரப் பாதுகாப்பு அண்மையில் பலப்படுத்தப்பட்டது. எப்படி இருப்பினும் மீண்டும் புலிகள் ஆயுதங்களை ஏந்தும் அளவுக்கு நாங்கள் இருந்து விட மாட்டோம் என்று மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கிழக்கு மாகாணத்தில் விடுதலைப்புலிகள் கொரில்லாத் தாக்குதலில் ஈடுபடத் தயாராகி வருவதாக சிறீலங்கா உளவுத்துறை அரசை எச்சரித்துள்ளதாக செய்திகள் தற்போது கசிந்துள்ளது. வன்னிப் பகுதியில் நடந்த இறுதிப் போரின்போது 2000க்கும் மேற்பட்ட போராளிகள் காடுகளுக்குள் ஊடுருவியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஊடுருவியுள்ளதாக தெரிவிக்கப்படும் போராளிகளில் பெரும்பாலானோர் கிழக்கில் உள்ள அடர்ந்த வனப் பகுதிகளுக்குள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் அவர்கள் கொரில்லாத் தாக்குதல்களில் ஈடுபட வாய்ப்பு இருப்பதாக சிறீலங்கா அரசை உளவுத்துறை எச்சரித்துள்ளது.

மேலும், கண்ணி வெடிகளை அகற்றுவதற்காக 5 ஆயிரம் இந்தியப்படையினர் இலங்கை சென்றுள்ளனர். ஐந்நூறு வீரர்கள் என்று முதலில் அறிவிக்கப்பட்டிருந்தாலும், 5 ஆயிரம் வீரர்களை இந்திய அரசு அனுப்பியுள்ளது. இவர்கள் காட்டுப்பகுதிகளுக்குள் தேடுதல் நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்தப்படவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தேவையேற்படும் போது மேலதிக இந்தியப்படை அனுப்பிவைக்கப்படலாம் எனவும், இனிவரும் காலங்களில் காடுகளுக்குள் இரகசியமாக படை நடவடிக்கைகளை இந்தியப்படை மேற்கொள்ளும் என அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

0 Responses to விடுதலைப்புலிகள் இன்னமும் பலத்துடனையே இருக்கின்றார்கள்: ரம்புகவெல்ல

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com