ராஜபக்ஷக்களின் கடும் அநீதிக்கு உள்ளாகிய முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேக்கா நாட்டை விட்டு வெளியேறி அமெரிக்காவில் நிரந்தரமாக தங்க தயாராகி வருவதாக அவரின் நெருங்கிய நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளுக்கு எதிராக யுத்த வெற்றிக்காரணமாக சிங்கள மக்கள் மத்தியில் சரத் பொன்சேக்கா பெரும் அபிமானத்தைப் பெற்றதை தொடர்ந்து, அவர் குறித்து அச்சமடைந்த ராஜபக்ஷ அரசாங்கம், அவரை இராணுவத் தளபதி பதவியில் இருந்து அகற்றி, கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரியாக நியமித்தது.
தற்போது அவரின் பாதுகாப்பு பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளன. அத்தோடு நிற்காமல், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, ஜெனரல் சரத் பொன்சேக்கா ஊடகங்களுக்கு தகவல் வழங்குவதை தடைசெய்துள்ளதுடன், அவர் தொடர்பான செய்திகள் மற்றும் புகைப்படங்கள் லேக் ஹவுஸ் நிறுவனத்தின் ஊடகங்களில் வெளிவருவதையும் தணிக்கை செய்துள்ளார்.
இந்த விடயங்கள் காரணமாக மனவேதனை அடைந்துள்ள சரத் பொன்சேக்கா,தனது உயிர் பாதுகாப்பு கருதி வெளிநாடு செல்ல தயாராகி வருவதை அறிந்த பௌத்த பிக்குமார் சிலர், வெளிநாட்டுக்கு செல்ல வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளனர். ஜனாதிபதியுடன் பேசி சரத் பொன்சேக்காவின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக பௌத்த பிக்குகள் தெரிவித்துள்ளனர்.
சரத் பொன்சேக்கா நாட்டை விட்டு வெளியேறி அமெரிக்காவில் குடியேறத் திட்டம்
பதிந்தவர்:
தம்பியன்
03 August 2009
0 Responses to சரத் பொன்சேக்கா நாட்டை விட்டு வெளியேறி அமெரிக்காவில் குடியேறத் திட்டம்