Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மூதூரில் அக்சன் பெய்ம் தன்னார்வ தொண்டு நிறுவன பணியாளர்களின் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் அனைத்துலக விசாரணைகள் தேவை என அனைத்துலக மனித உரிமைக் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது.

2006ம் ஆண்டு மூதூரில் 17 தன்னார்வ தொண்டு நிறுவனப் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.படுகொலை தொடர்பில், சிறீலங்கா அதிபரின் ஆணைக்குழு மேற்கொண்ட விசாரணைகள் திருப்திதரவில்லை என மனித உரிமைக் கண்காணிப்பகம் குற்றம் சுமத்தியுள்ளது.

நடந்து முடிந்த விசாரணைகளில் இதுவரை கொலையாளிகள் கைது செய்யப்படவில்லை. அதிபர் ஆணைக்குழு இதில் சிறிலங்காப் படையினர் சம்பந்தப்படவில்லை எனவும், அதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை எனவும் ஜூலை நடுப்பகுதியில் தெரிவித்தது.

இந்தப் படுகொலைகள் விடுதலைப் புலிகளால் அல்லது ஊர்க்காவல் படையினரால் செய்யப்பட்டிருக்க வேண்டும் எனவும் இந்த அதிபர் ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்சன் பெய்ம் என்ற பிரெஞ்சு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் 17 உள்நாட்டுத் தொண்டர்கள் 2006ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17ம் திகதி படுகொலை செய்யப்பட்டனர்.

படுகொலை செய்யப்பட்ட பணியாளர்களில் 16 பேர் தமிழர்களும், ஒருவர் முஸ்லிமும் அடங்குவர்.

மனித உரிமைகள் காப்பகத்தின் சட்ட மற்றும் கொள்கைப் பணிப்பாளர் ஜேம்ஸ் றோஸ், "ஐ.நா.வும் சம்பந்தப்பட்ட நாடுகளும் இது தொடர்பான அனைத்துலக விசாரணைகளை மேற்கொள்வதற்கான அழுத்தங்களைக் கொடுப்பதற்கான நேரம் வந்துவிட்டது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to அக்சன் பெய்ம் தொண்டு நிறுவனப் பணியாளர் படுகொலை! அனைத்துலக விசாரணை தேவை! மனித உரிமைக் கண்காணிப்பகம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com