இலங்கை வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியேற்றும் 180 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் வவுனியா மெனிக்பாமிலிருந்து 1094 பேரை சொந்த இடங்களுக்கு அனுப்பிவைக்கும் நிகழ்வு நேற்று புதன்கிழமை வவுனியா நகரசபை மைதானத்தில் இடம்பெற்றது.
அப்போது ஜனாதிபதியின் ஆலோசகரும் வடமாகாண செயலணித் தலைவருமான பசில்ராஜபக்சே எம்.பி. உரையாற்றும் போது, ‘’இடம்பெயர்ந்து வாழ்கின்ற மக்களுக்கு எவ்வளவு தான் வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தாலும் அவர்களால் சந்தோசமாக வாழ முடியாது என்பது எமக்குத் தெரியும்.
தமிழ் மக்கள் அகதி முகாம்களில் வாழ்வதற்கு பயங்கரவாதிகளே பொறுப்பு. தமிழ் மக்களுக்கு வசதி வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்கும் நாம் இதற்கு பொறுப்பல்ல’’என்று தெரிவித்துள்ளார்
எத்தனை வசதிகள் கிடைத்தாலும் முகாம் தமிழர்கள் நிம்மதியாக வாழமுடியாது:பசில்ராஜபக்சே
பதிந்தவர்:
தம்பியன்
06 August 2009
0 Responses to எத்தனை வசதிகள் கிடைத்தாலும் முகாம் தமிழர்கள் நிம்மதியாக வாழமுடியாது:பசில்ராஜபக்சே