சிறிலங்காவில் இறுதிக்கட்ட மோதல்களின் போது பாரிய தமிழின அழிப்பொன்றினை மேற்கொண்ட சிறிலங்கா அரசு, யுத்தம் முடிவடைந்தாக கூறிக்கொண்டு, அதனை காரணம் காட்டி, உல்லாசப்பயணத்துறையினை மேம்படுத்த பல்வேறு புதிய திட்டங்களை சர்வதேச மட்டத்தில் நடைமுறைப்படுத்த எத்தணித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஐரோப்பிய நாடுகளிடம், இவ்விளம்பரப்படுத்தலை,மேற்கொண்டு வருவது தெரியவந்துள்ளது. அவ்வகையில், புலம்பெயர் தமிழ் மக்கள் அதிகமாக வாழும் சுவிற்சர்லாந்தில், Heryi Einkaufszenter எனும் நிறுவனத்தின் அணுசரணையுடன், சிறிலங்காவின் பௌத்த கலாச்சாரம், உணவுப்பழக்கம், மக்கள் பண்பாடு, போன்றவற்றை சுவிஸ் மக்களுக்கு எடுத்துக்காட்டி, ஒரு விளம்பரப்படுத்தலை மேற்கொள்ள, நடைமுறைப் படுத்தப்பட்டிருந்த திட்டம், தமிழ் இளையோர் அமைப்பினரால் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பிடப்பட்ட இந்நிறுவனம் வருடந்தோறும், ஒவ்வொரு நாடுகளை தனது தொணிப்பொருளாக எடுத்துக்கொண்டு, அந்த நாடுகளின் தனித்தன்மையை சுவிஸ் மக்களுக்கு காட்சிப்படுத்துகிறது. அத்துடன், அந்தந்த நாடுகளின் உல்லாசத்துறையை மேம்படுத்துவதிலும் உதவி புரிகிறது.
அவ்வகையில் இம்முறை, தனது நிறுவனத்தின் ஊடாக சிறிலங்கா பற்றிய வர்த்தக நிகழ்வொன்றினை, சுக் மாநிலத்தில் நடாத்த ஏற்பாடு செய்தது இந்நிறுவனம். இத்தகவல் அறிந்த சுக் மாநில தமிழ் இளையோர் அமைப்பினர் விரைவாக செயற்பட்டு, இந்நிகழ்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், தாயகத்தில் தமிழ் மக்கள் படும் அவல நிலை குறித்து விளக்கி, ஒரு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்தனர். அத்துடன், இந்நிகழ்வுக்கு பதிலாக, தமிழ் மக்கள் படும் அவலத்தினை சுவிஸ் மக்களும் அறிந்து கொள்ள ஏதுவாக, செய்தி மையம் ஒன்றினை அமைத்து தரும் படியும் பரிந்துரை செய்தனர்.
எனினும் இவற்றிற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டு எடுக்கப்பட்ட முயற்சிக்கு எதிராக சிறந்த சட்ட ஆலோசகர்களின் உதவியுடன், சுக் மாநில தமிழ் இளையோர் அமைப்பினர் மீண்டும் மேற்கொண்ட கடும் நடவடிக்கைகளினால், இவ்வர்த்தக நிகழ்வு முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவத்தின் போது, சுக் மாநில தமிழ் இளையோர் அமைப்பை சேர்ந்த சிலரை, காவற்துறையினர் விசாரிக்க நேர்ந்ததும் குறிப்பிடத்தக்கது.
நன்றி, தமிழ் மீடியா
சிறிலங்காவை விளம்பரப்படுத்தும் நிகழ்வு?- சுவிஸ் தமிழ் இளையோர்களினால் தடுத்து நிறுத்தம்!?
பதிந்தவர்:
தம்பியன்
30 August 2009
0 Responses to சிறிலங்காவை விளம்பரப்படுத்தும் நிகழ்வு?- சுவிஸ் தமிழ் இளையோர்களினால் தடுத்து நிறுத்தம்!?