Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

உலகளாவிய ரீதியில் பாதுகாப்புக்கு என அதிக நிதி ஒதுக்கும் நாடுகளின் பட்டியல் குறித்து ஆய்வு ஒன்று சமீபத்தில் நடத்தப் பட்டது.

அதில் இந்தியா 5 ஆவது இடத்தைப் பிடித்துள்ளதுடன் பிரிட்டனை விட முன்னிலை வகிப்பதாகவும் தெரிய வந்துள்ளது. ISS என்ற இந்த சர்வதேச நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கு என அதிக நிதி ஒதுக்கீடு செய்யும் நாடுகளில் முதலிடத்தில் அமெரிக்கா விளங்குகின்றது.

2 ஆம் இடத்தில் சீனாவும் 3 ஆவது இடத்தில் சவுதி அரேபியாவும் உள்ளன. 4 ஆவது இடத்தில் ரஷ்யாவும் அதற்கடுத்த ஐந்தாவது இடத்தில் இந்தியாவும் உள்ளன. 2016 ஆம் ஆண்டில் பாதுகாப்புத் துறைக்கு இந்தியா ஒதுக்கிய நிதி $51.1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இதுவே 2017 இல் $52.2 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளது. 2016 ஆம் ஆண்டு பாதுகாப்புக்கு $52.5 பில்லியன் டாலர்களை ஒதுக்கியிருந்த பிரிட்டன் கடந்த வருடம் பின்னடவை சந்தித்து $50.7 பில்லியன் டாலர்களை மாத்திரமே ஒதுக்கியிருந்தது. இதனால் பிரிட்டனை இந்தியா சென்ற வருடம் அதாவது 2017 இல் பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீட்டில் விஞ்சியுள்ளது.

உலகில் பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீட்டில் முன்னணியில் உள்ள நாடான அமெரிக்கா 2017 ஆம் ஆண்டு தனது பட்ஜெட்டில் இதற்கென ஒதுக்கிய நிதி $150.5 பில்லியன் டாலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to உலகில் பாதுகாப்புக்கு அதிக பட்ஜெட் ஒதுக்கும் நாடுகளில் 5 ஆவது இடத்தில் இந்தியா!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com