Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

காங்கிரசை தமிழகத்தில் பலமான கட்சியாக மாற்றி காட்டுவேன் ராகுல்

அவர்கள் என்ன பேசினார்கள் என்பதை இப்போது வெளிப்படுத்த முடியாது

காங்கிரஸ் கட்சியால் சேர நடிகர் விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் டெல்லி சென்று ராகுல்காந்தியை சந்தித்து உரையாடியுள்ளார். தமிழக காங்கிரசை வலுப்படுத்த ராகுல்காந்தி அக்கறை காட்டுகிறார். 37 வருடங்களாக இங்கு காங்கிரஸ் கட்சியால் ஆட்சிக்கு வரு முடியவில்லை. கோஷ்டி சண்டைகளால் கட்சி பல வீன முற்று உள்ளது. காங்கிரசை தமிழகத்தில் பலமான கட்சியாக மாற்றி காட்டுவேன் என்று ராகுல் சமீபத்தில் சூளுரைத்தார்.

அதன் அடிப்படையில் தான் தமிழக இளைஞர் காங்கிரசுக்கு நவம்பர் முதல் வாரத்தில் தேர்தல் நடத்தப்படுகின்றன. இதற்கான உறுப்பினர் சேர்ப்பு பணி மும்முரமாக நடக்கிறது. ராகுல்காந்தி நேரடி மேற்பார்வையில் இந்த தேர்தல் நடைபெறுவதால் தமிழக காங்கிரசின் முன்னணி தலைவர்கள் தங்களையும் இணைத்து கொண்டு உறுப்பினர் சேர்ப்பிலும் தேர்தல் வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் நடிகர் விஜய்யை ராகுல்காந்தி டெல்லியில் திடீரென்று சந்தித்து பேசி உள்ளார். தமிழக அரசியல் நிலவரம் குறித்து நீண்ட நேரம் அவர்கள் பேசினர். விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பை துவங்கி சமூக சேவை பணிகளில் ஈடுபட்டு வருகிறார். தமிழகம் முழுவதும் ஏழை மாணவ- மாணவிகளுக்காக இலவச கம்ப்யூட்டர் மையங்களையும் துவக்குகிறார். விரைவில் அரசியலில் ஈடுபடப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார். இந்த நிலையில் ராகுலை விஜய் சந்தித்து பேசியது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

விஜய் நடவடிக்கைகளை ராகுல் கடந்த சில மாதங்களாக கூர்ந்து கவனித்ததாக கூறப்படுகிறது. விஜய்யின் அரசியல் ஆர்வம், அவரது சமூக சேவைப்பணிகள் டெல்லியில் நடந்த விழாவில் பங்கேற்று பிரதமர் வெளியிட்டு தபால் தலையை பெற்றுக்கொண்டது. சிறந்த நடிப்பு மற்றும் மக்கள் சேவைக்காக டாக்டர் பட்டம் பெற்றது. தமிழகத்தில் உள்ள ரசிகர்கள் செல்வாக்கு போன்ற அனைத்து விவரங்களையும் ராகுல் சேகரித்தார். அதன் அடிப்படையிலேயே விஜய்க்கு அழைப்பு விடுத்து சந்தித்து பேசியுள்ளார்.

இந்த சந்திப்பு பற்றி பல்வேறு யூகங்கள் கிளம்பியுள்ளன. விஜய்யை காங்கிரசில் சேரும்படி வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. காங்கிரசில் சேரும்பட்சத்தில் அவருக்கு தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவி தரப்படும் என்று ராகுல் உறுதிமொழி அளித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தனி கட்சி துவங்குவதானால் காங்கிரசுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சந்திப்பு குறித்து விஜய் தந்தை எஸ்.ஏ.சந்திர சேகரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது விஜய்யும், ராகுல்காந்தியும் நேற்று முன்தினம் டெல்லியில் சந்தித்து பேசினார்கள். இருவரும் நீண்ட நேரம் பேச்சு நடத்தினார்கள். அவர்கள் என்ன பேசினார்கள் என்பதை இப்போது வெளிப்படுத்த முடியாது. ராகுல்காந்தி மிகப்பெரிய அரசியல் கட்சியின் பொதுச்செயலாளராக இருக்கிறார். விஜய்யை அவர் சந்தித்து பேசியது மகிழ்ச்சியான விஷயம் என்றார்.

நன்றி, அலைகள்.

0 Responses to ராகுல் காந்தி விஜய் சந்திப்பு தமிழக காங்கிரஸ் இளைஞர் அணி தலைவர் யார்?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com