லண்டனில் இருந்து யாழ்ப்பாணம் சென்றுவிட்டு மீண்டும் இலண்டன் செல்வதற்காக புறப்பட்ட இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரியவருகிறது. யாழ்ப்பாணம் சுழிபுரம் தொள்புரத்தைச் சேர்ந்த 24 வயதுடைய தெய்வேந்திரம் குவைத் என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
இலண்டனில் வசித்து வருகின்ற இவர் கடந்த 1ஆம் திகதி பண்டாரநாயக்கா விமான நிலையம் ஊடாக கொழும்பை சென்றடைந்திருந்தார். இரு தினங்கள் கொழும்பில் தங்கியிருந்த இவர், 3 ஆம் திகதி யாழ்ப்பாணம் தொல்புரத்திலுள்ள தனது குடும்பத்துடன் இணைந்திருந்தார்.
பின்னர் நேற்று முன் தினம் (09) இவர் கொழும்பு செல்வதற்கென புறப்பட்டதாகவும், எனினும் நேற்று (10) மாலை வரை அவர் கொழும்பை சென்றடையவில்லை எனவும் இவருடனான தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு இருப்பதாகவும் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.
அவரது கைத்தொலைபேசி செயலிழந்துள்ளதாகவும், கைத் தொலைபேசிக்கு அழைப்பு மேற்கொண்ட போதிலும் பதில் எதுவும் இல்லையெனவும் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை சிறீலங்கா காவல் நிலையத்தில் குடும்பத்தார் முறைப்பாடு செய்துள்ளனர். இலண்டனில் இலங்கைக்கு விஜயம் செய்து ஒருவாரம் தங்கியிருந்த நிலையில் மீண்டும் 15 ஆம் திகதி இலண்டன் திரும்புவதற்காக இவர் விமானப் பயணச் சீட்டும் பெற்றிருந்தார் எனவும் குடும்பத்தார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
0 Responses to லண்டனில் இருந்து கொழும்பு சென்ற தமிழர் காணாமல்போயுள்ளார்