இரா சம்பந்தன் அவர்களை தோற்கடித்தால் அரசியல் அனுபவம் இல்லாதவர்களை பதவியில் வைத்துக் கொண்டு அவர்களை ஏமாற்றி தமிழர்களின் உரிமைகளை ஒவ்வொன்றாக பறித்து விடலாம் என்பதே மகிந்தாவின் திட்டம் எனவே எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு இலங்கை வாழ் தமிழ்ப் பேசும் மக்கள் அனைவரும் வாக்களித்து முழுதான தமிழர் பிரதிநிதித்துவத்தை திரு இரா சம்பந்தன் அவர்கள் தலைமையில் இயங்கும் அமைப்புக்கு ஆதரவு வழங்கி அவர்களை வெற்றி கொள்ளச் செய்யவேண்டும்.
இவ்வாறு உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தலைமையகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜேர்மனியில் இயங்கும் அதன் தலைமை அலுவலகத்திலிருந்து அதன் செயலாளர் நாயகம் திரு. துரை கணேசலிங்கம் மற்றும் சர்வதேச ஊடகத் தொடர்பாளர் திரு ஆர். என். லோகேந்திரலிஙகம் ஆகியோர் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்ஷகண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது
மேற்படி அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கமானது ஒரு அரசியல் சார்பற்ற அமைப்பாக கணிக்கப்பட்டாலும் தமிழர் பிரச்சனை ஒரு சர்வதேச பிரச்சனையாக மாற்றம் பெற்ற நாள் தொடக்கம் நமது இயக்கத்தின் அணுகு முறையிலும் சில மாற்றங்களை நாம் கொண்டு வந்தோம். அதற்கு காரணம் உண்டு.
1974ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதிநாளன்று தமிழர்கள் மீது தாக்குதல்களை நடத்தி 11 உயிர்களை பலி கொண்ட இனவாத இலங்கை அரசின் அநீதியான செயற்பாடுகளை உலகிற்கு காட்ட வேண்டும் என்பதற்காகத்தான் அந்த ஆண்டே உடனடியாக உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.
எனவே நமது இயக்கமானது அரசியலை ஒரு பக்கம் தள்ளி வைத்து விட்டு தமிழர் பண்பாட்டை மட்டும் முன்னிலைப் படுத்த முடியாது. எனவேதான் நாம் நமது கடந்த கால உலக மாநாடுகளில் மாவை சேனாதிராஜா மறைந்த அமைச்சர் சந்திரசேகரன் தமிழகத்தின் தொல். திருமாவளவன் உட்பட பல தலைவர்களை பங்குபெறச் செய்து அவர்களது உரைகளில் தமிழத்தேசியம் தொடர்பான கருத்துக்களை நமது மக்கள் கேட்கும் படியாகச் செய்தோம்.
அதோடு தமிழர் நலன்களின் அக்களை கொண்ட தலைவர்களோடு இன்னும் நமது தொடர்புகளை பேணிவருகின்றோம். இந்த வகையில் தற்போதை இலங்கை அரசியலிலும் குறிப்பாக தமிழர் பிரதேச அல்லது தமிழர் தாயக அரசியலில் நாம் அக்கறை கொள்ள வேண்டியிருக்கின்றது.
எமது கணிப்பின்படி தற்போதை அரசியல் கொந்தளிப்பில் இருந்து தமிழ் மக்களைக் காப்பாற்றக் கூடிய ஒரு மாபெரும் சக்தியாக காணப்படுவது திரு இரா சம்பந்தன் அவர்கள் தலைமையிலான தமிழத் தேசிய கூட்டமைப்பு ஒன்றுதான். ஏனைய தமிழர் அமைப்புக்கள் கடந்த காலங்களைப் போல தமிழ் மக்களை காட்டிக் கொடுக்கும காரி;யங்களைத்தான் ஆற்றக்கூடியவர்களாக உள்ளார்கள் என்பது வெளிப்படையாகத் தெரிகின்றது.
எம்மைப் பொறுத்தளவில் நடக்கவிருக்கும் இலங்கைப் பாராளுமன்றத்திற்கான தேர்தல் உலகத்தமிழர்களுக்கு ஒரு இறுதிச் சந்தர்ப்பம் ஆகும். இந்த சந்தர்ப்பத்தை நாம் நன்கு சிந்தித்து பயன்படுத்த வேண்டும்.
தேர்தல் முடிந்து ஆட்சியமைக்கும் சிங்கள அரசாங்கத்தோடு சமரசம் எதுவும் செய்து கொள்ளால் பேச்சுவார்த்தை மேசையிலோ அன்றி பொதுமேடை ஒன்றிலோ நமது உரிமைக்காக தகுந்த முறையில் கருத்துக்களை பரிமாறிக் கொள்ளக் கூடிய ஒரேயொரு அமைப்பு நமது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஒன்றுதான். அதனை தலைமை தாங்கி நடத்துகின்றவர் பழுத்த அரசியல்வாதி திரு இரா. சம்பந்தன் அவர்கள்.
எனவே மகிந்தாவுடனோ அன்றி ரணில் விக்கிரமசிங்காவுடனோ சரி சமனாய் அமர்ந்திருந்து தமிழர்களின் உரிமை மற்றும் தன்னாட்;சி ஆகியவை தொடர்பாக கருத்துக்களையும் கேள்விக் கணைகளையும் அள்ளி வீசக் கூடியவர்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஒன்றுதான். ஈழ மக்களைக் குழப்புவது என்றால் தமிழ் தேசியக் கூட்டமைப்பைக் குழப்ப வேண்டும். இதுதான் மகிந்த அரசின் மட்டமான சிந்தனை.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பை முழுமையாகத் தோற்கடித்தால் இலங்கையில் தமிழர்களின் உரிமைப் போராட்டம் ஒன்று இனிமேல் நடைபெறாது. ஏனைய தமிழர் தரப்பு ஆட்களை விலைக்கு வாங்கி விடலாம் என்பதும் இரா சம்பந்தன் அவர்கள் தலைமையிலான கூட்டமைப்பை என்றுமே தன்னால் விலைக்கு வாங்க முடியாது என்பதை மகிந்தா நன்கு அறிந்து வைத்துள்ளார். அவரது எண்ணத்திற்கு நாம் சாவு மணி அடிக்க வேண்டும்
எனவே நாளைய தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழர் பிரதேசங்களில் முழுமையான வெற்றியடைய ஈழத்தில் வாழும் தமிழ் மக்களும் அவர்களை என்றும் நேசிக்கும் உலகத் தமிழர்களும் ஆதரவு வழங்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்."
இவ்வாறு உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர் நாயகமும் சர்வதேச ஊடகத் தொடர்பாளரும் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈழ மக்களைக் குழப்புவது என்றால் தமிழ் தேசியக் கூட்டமைப்பைக் குழப்ப வேண்டும். இதுதான் மகிந்த அரசின் மட்டமான சிந்தனை.



0 Responses to மகிந்தவிலும் பார்க்க நீண்ட அரசியல் அனுபவம் கொண்டவர் சம்பந்தன்