போர் முற்றிழுமாக முடிந்துவிட்டதால் முகாம்களில் உள்ள தமிழர்களை மீண்டும் அவர்கள் இடத்திற்கே குடியேற அனுமதி அளிக்கப்படும் என்று ராஜபக்சே அறிவித்திருந்தார்.
ஆனால் அந்த அறிவிப்பு அறிவிப்போடு நின்றுள்ளது.
இந்நிலையில், இலங்கையின் வன்னிப்பகுதி தடுப்பு முகாம்களில் உள்ள தமிழர்களை அவர்களின் சொந்த இடங்களில் மீண்டும் குடியமர்த்தும் திட்டம் தள்ளிப்போடலாம் என்று ராஜபக்சேவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
தமிழர்களை குடியமர்த்துவதற்கு பதிலாக கைப்பற்றப்பட்ட வன்னிப்பகுதியில் படையினரையும் சிங்கள மக்களையும் குடியேற்ற திட்டமிட்டுள்ளது சிங்கள அரசு.
அதன் பின்னர் அவர்களுக்கு மத்தியில் தமிழர்களை குடியமர்த்த ரகசிய திட்டம் போட்டுள்ளது சிங்கள அரசு என்றுஇது தொடர்பான சில தகவல்களை ராவய எனும் சிங்கள வார இதழ் வெளியிட்டுள்ளது.
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களிலும் மன்னாருக்குக் கீழேயும் வவுனியாவுக்கு மேலேயும் இந்த குடியேற்ற திட்டங்களை அரசு செயற்படுத்துவதற்கு உத்தேசித்துள்ளது.
அந்தப் பகுதிகளில் தற்போது மக்கள் எவரும் இல்லை. அவர்கள் அனைவரும் தடுப்பு முகாம்களுக்குள் அடைக்கப்பட்டுள்ளார்கள்.
இந்தப் பகுதியில் இருக்கக்கூடிய அனைத்துத் தமிழ்க் கிராமங்களையும் இல்லாது அழிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ராவய இதழ் தெரிவித்துள்ளது.
தமிழர்கள் வசித்த பகுதிகளில் சிங்களவர்களை குடியேற்ற முற்படும் ராஜபக்சே
பதிந்தவர்:
தம்பியன்
23 August 2009
0 Responses to தமிழர்கள் வசித்த பகுதிகளில் சிங்களவர்களை குடியேற்ற முற்படும் ராஜபக்சே