Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வவுனியாவில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும் செட்டிக்குளம் ஏதிலிகள் தடுப்பு முகாமில் நாளாந்தம் தமிழர்கள் வெள்ளைவான் கும்பலினால் கடத்தப்படுவதாக பி.பி.சி யின் சிங்கள சேவையான 'சந்தேசிய' தெரிவித்துள்ளது.

இதுகுறித்து எதிலி ஒருவரின் கருத்துக்களை உள்வாங்கி இச்செய்தியை சந்தேசிய வெளியிட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கையில்:

கடத்தல் காரர்கள் டொல்பின் ரக சொகுசு சிற்றூர்தியில் வந்து தமிழர்கள் கடத்திச் செல்லப்படுகின்றனர். குறிப்பாக நாளாந்தம் இரண்டு அல்லது மூன்று தமிழர்கள் இவ்வாறு கடத்தப்படுகின்றனர்.

வெள்ளைவான் வந்ததும் ஏதிலிகள் அனைவரும் அச்சம் காரணமாக தங்களது கூடாரங்களுக்குள் சென்று பதுங்குகின்றனர்.

இதேநேரம் ஏதிலிகள் சிலர் அதிகாரிகளுக்கு பணத்தினை வழங்கி அங்கிருந்து தப்பித்துச் செல்கின்றனர். எனினும் இவர்கள் கடத்தப்படுகின்றார்களா? அல்லது பணத்தினை வழங்கித் தப்பித்துச் செல்கின்றனரா என்பது தெரிவில்லை.

ஏதிலிகள் தடுப்பு முகாமில் உள்ள ஏதிலிகளைப் பார்வையிடுவதற்கு செல்லும் உறவினர்களுக்கு அனுமதி கிடைக்காமையால் பெரும் சிரமத்தை அவர்கள் சந்திக்கின்றனர்.

பிரிக்கப்பட்ட முட்வேலிப் பகுதியில் 5 மீற்றர் தூரத்தில் நின்றே உறவினர்களுடன் உரையாட முடிகின்றது. ஏதாவது பொருட்களை அவர்களுக்கு வழங்க வேண்டும் என்றால் தூதரத்தில் நின்று உறவினர்களை நோக்கி எறிய வேண்டிய நிலை எழுந்துள்ளது.

பருவ மழை தொடர்ந்தால் இந்த முகாம்களில் வசிக்க முடியாத நிலைதான் ஏற்படும். மழை வெள்ளம் முகாமில் உள்ள கூடாரங்களுக்குள் புகுந்துவிடுகின்றது. மலசல கூடங்கள் நிரம்பி வெள்ளத்துடன் கலப்பதால் ஏற்படும் தூர்நாற்றம் வீசுகின்றது.

இந்த முகாம்களில் உள்ளவர்களை மீளக்குடியமர்த்துவதற்கு மேலும் மூன்று வருடங்கள் செல்லும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

0 Responses to செட்டிக்குள தடுப்பு முகாமில் நாளாந்தம் தமிழர்கள் வெள்ளை வானில் கடத்தல் - பி.பி.சி சிங்கள சேவை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com