Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

உலகெங்கும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களால் ஈகைச்சுடர் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 22ஆம் ஆண்டு இன்று நினைவுகூரப்படுகின்றது.

1987ம் ஆண்டு ஜந்து அம்ச கோரிக்கையினை முன்வைத்து நல்லூர் வீதியில் உண்ணா நோன்பினை தொடக்கி வைத்த ஈகைச்சுடர் லெப்.கேணல் திலீபன் அவர்களின் ஈகம் என்றென்றும் தமிழ் மக்களின் மனங்களில் நிலைத்திருக்கும்.

விடுதலை உணர்வுகளை வெளிக்கொண்டு செயற்படக்கூடிய சக்தி பன்னாட்டு தமிழ் மக்களிடம்தான் உள்ளது பன்னாட்டு தமிழ்மக்களின் எழுச்சிகள் ஊடாக விடுதலைப் போராட்டத்தின் வளர்சியின் மாற்றத்தினை ஏற்படுத்தலாம் என்பதும் உண்மைநிலை.

இவ் உணர்வெளிச்சியின் வெளிப்பாடகவே உலகெங்கும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களால் ஈகைச்சுடர் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 22ஆம் ஆண்டு நினைவுகூரப்படுகின்றது.

0 Responses to இன்று, ஈகைச்சுடர் லெப்.கேணல் திலீபனின் 22ஆம் ஆண்டு நினைவு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com