Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கமுதி பகுதியில் உலகின் மிகப்பெரிய சூரிய மின்சக்தி நிலையம் அமைக்கப்பட்டு, மின் உற்பத்தி துவங்கியுள்ளது.

கமுதியில்,  648 மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட சூரிய மின்சக்தி நிலையம் துவக்கப்பட்டுள்ளது. சுமார் 5000 ஏக்கர் பரப்பளவில் ரூ.4550 கோடி முதலீட்டில் இந்த நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையம் அமைப்பதற்கு தேவையான பொருட்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்டு கடந்த 8 மாதங்களில் அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த மின் உற்பத்தி நிலையத்தில் ஒரே சமயத்தில் 8500 பேர் பணியாற்றுகின்றனர். இந்த சூரிய ஒளி மின்சக்தி நிலையத்தில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் பிற மாநிலங்களுக்கு விற்பனை செய்யப்படும்.

0 Responses to தமிழகத்திலுள்ள உலகின் மிகப்பெரிய சூரிய மின்சக்தி நிலையம் மின் உற்பத்திப் பணியைப் தொடங்கியது!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com