வடக்கு மாகாணத்தில் இராணுவத்தின் பாதுகாப்போடு சிங்களக் குடியேற்றங்கள் திட்டமிட்ட ரீதியில் அமைக்கப்படுகின்றன என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற விவாதமொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளதாவது, “வடக்கு மாகாணத்தில் பௌத்தர்கள் வாழும் இடங்களில் புத்த சிலைகளை அமைப்பதில் எமக்கு ஆட்சேபனை இல்லை. நாம் ஒரு மதத்துக்கோ அல்லது இனத்துக்கோ எதிரானவர்கள் அல்ல. வடக்கில் ஒன்றரை இலட்சம் இராணுவத்தினரை வைத்துக் கொண்டு ஆங்காங்கே புத்தர் சிலைகள் அமைக்கப்படுகின்றன. தென்பகுதி மக்களை வடக்கில் குடியமர்த்தும் செயற்பாடுகளுக்கு இராணுவத்தினர் பாதுகாப்பு வழங்குகின்றனர். இன நல்லிணக்கத்துக்கு இராணுவத்தினர் முட்டுக்கட்டையாக இருக்கின்றனர்.” என்றுள்ளார்.

0 Responses to வடக்கில் இராணுவப் பாதுகாப்போடு சிங்களக் குடியேற்றங்கள் அமைக்கப்படுகின்றன: சிவசக்தி ஆனந்தன்