இலங்கைத் தமிழர் விஷயத்தில் முதல்வரின் செயல்பாடுகள் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் இடையே கோபத்தையும், வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர் கருணாநிதி நேற்று முன் தினம் வெளியிட்ட அறிக்கையில், ‘'3.50 லட்சம் தமிழர்கள் படும் துன்பத்திற்கு ராஜபட்ச மட்டும் காரணம் அல்ல; பிரதமர் மன்மோகன் சிங்கும், முதல்வர் கருணாநிதியும்தான் காரணம் என்று இலங்கை தமிழர்கள் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.
நெடுமாறன் கோஷ்டியினரின் உள்நோக்கத்தை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. உண்மைக்கு மாறான தகவல்கள், நெடுமாறன் மூலம் வெளியிடப்பட்டிருக்கின்றன.
எனக்கு ஒரு முடிவு கட்ட திட்டமிட்டு, அந்தப் பழியை உலகத் தமிழர்கள் யார் மீதாவது போட்டு விட்டு, தாங்கள் தப்பித்துக்கொள்ள, அந்தக் கோஷ்டியினர் முன்கூட்டியே திட்டமிட்டு செய்யும் பிரச்சாரம் என்று நான் கருத வேண்டியிருக்கிறது.
எப்படியிருந்தாலும், 'வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்' என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்’’ என்று கூறியிருந்தார்.
இது குறித்து பழ.நெடுமாறன் இன்றூ வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழர்களின் வெறுப்புக்கும், கோபத்துக்கும் ஆளாகும் போதெல்லாம் தனது உயிருக்கு ஆபத்து என்று பிரச்னையை திசைதிருப்ப முயல்வது முதல்வர் கருணாநிதிக்கு கைவந்த கலையாகும்.
இதுபோன்ற நாடகங்களை நிறுத்திவிட்டு இலங்கை முகாம்களில் உள்ள மக்களை மீட்பதற்கு உண்மையான நடவடிக்கைகளை முதல்வர் மேற்கொள்ள வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.



0 Responses to உயிருக்கு ஆபத்து என்று கலைஞர் நாடகமாடுகிறார்:பழ.நெடுமாறன்