Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மத்திய அரசின் கொள்கையை கண்டித்து, இன்று டில்லியில் உள்ள சிறீலங்கா தூதரகம் முன் காவிக்கொடி பேரணி நடத்திய இந்து அமைப்பைச் சேர்ந்த 200 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்தியா முழுவதும் உள்ள 22 இந்து அமைப்புகளின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் டெல்லியில் உள்ள சிறீலங்கா தூதரகம் முன் காவிக்கொடி பேரணி நடத்தினர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், இலங்கையில் 40 ஆண்டுகளாக இலட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

தற்போதும், சொந்த நாட்டில் அகதிகளாக அவதிப்படுகின்றனர். இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கையில் சிறீலங்கா ஈடுபட்டாலும், மத்திய அரசு, சிறீலங்காவுக்கு சாதகமாகவே செயல்படுகிறது. சீனா, பாகிஸ்தான் இராணுவ தளங்கள் அமைக்க சிறீலங்காவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவுக்கு ஆபத்து ஏற்படும்.

ஆவுஸ்திரேலியா, மலேசியா, மாலத்தீவு என, பெரும்பாலான நாடுகளில் வசிக்கும் தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஆகவே மத்திய அரசின் கொள்கையை கண்டித்து, சிறீலங்கா தூதரகம் முன் காவிக்கொடி பேரணி நடத்தினோம். இந்தப் பேரணியில் இந்தியா முழுவதும் உள்ள 22 இந்து அமைப்புகளின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர் என்றார். அப்போது பேரணியில் கலந்து கொண்ட 200 பேரை போலீசார் கைது செய்தனர்.

0 Responses to சிறீலங்கா தூதரகம் முன் காவிக்கொடி பேரணி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com