Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் நிறுவன பணியாளர்களை விடுவிக்குமாறான ஐ.நா கோரிக்கையை அரசு நிராகரித்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட தமது நிறுவன பணியாளர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் அல்லது அவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பு கோரிக்கை விடுத்திருந்தது. நியூ யோர்க்கிலிருந்து கடந்த சனிக்கிழமை இந்தக் கோரிக்கை விடப்பட்டது.

இவர்களை தமது நிறுவனத்திற்கு அறிவிக்காமலேயே கைது செய்யப்பட்டமையையும் ஐக்கிய நாடுகள் அமைப்பு சுட்டிக்காட்டியதோடு, சட்டவிரோதமான முறையில் குறித்த இருவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் பேச்சாளர் மரி ஒகபே தெரிவித்துள்ளார். அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டும், அல்லது அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் விடுத்த கோரிக்கையை இலங்கை அரசு நிராகரித்துள்ளது.

இலங்கை வெளிநாட்டு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் ஆசியன் டிரிபியூனுக்கு அளித்த பேட்டியில், ஐ.நா பணியாளர்கள் இருவரும் வெளிநாட்டு பணியாளர்கள் போலக் கருதப்பட மாட்டார்கள் என்றும், பிற நிறுவனங்களில் பணியாற்றும் உள்ளூர் பணியாளர்கள் போலவே அவர்கள் கருதப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுவார்கள் என்றும் கூறியுள்ளார்.

ராஜதந்திரிகளுக்கான சட்ட பாதுகாப்பை இந்த உள்ளூர் பணியாளர்களுக்குக் கொடுக்க முடியாது என்றி கூறியுள்ள அந்த அதிகாரி ஐ.நா வேண்டுகோளை நிராகரித்துள்ளார்.
இந்த இரு பணியாளர்கள் மற்றும் யுனிசெஃப் பேச்சாளர் பற்றிய விடயங்களை ஐக்கிய நாடுகள் செயலாளர் பான் கி மூனும் அண்மைய தொலபேசி உரையாடலின்போது, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு அழுத்தம் கொடுத்துள்ளதாகத் தெரிகிறது.

0 Responses to ஐ.நா பணியாளர்களை விடுதலை செய்ய முடியாது - அரசு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com