Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அடுத்த 48 மணி நேரத்தில் பாகிஸ்தான் நடிகர்-நடிகைகள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று, மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனா அமைப்பு கெடுவிதித்துள்ளது. காஷ்மீரின்  உரி எல்லையொயில் உள்ள ராணுவத் தலைமையகம் மீது தீவிரவாதிகள் கடந்த 4 நாட்களாகத் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் இதுவரை 20 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது.மத்திய அரசு, தீவிரவாதிகளின்  இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தான்தான் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளது. இதையடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது மஹாராஷ்டிரா நவநிர்மாண்  சேனா அமைப்பு.

அதில், ஹிந்தி படங்களில் பாகிஸ்தான் நடிகர்-நடிகைகள் ஏராளமான படங்களில்  வருகிகின்றனர். அவர்கள் அடுத்த 48 மணி நேரத்தில் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும். இல்லாவிட்டால் அவர்களை நாங்கள் கட்டாயப்படுத்தி வெளியேற்றுவோம் என்று தெரிவித்துள்ளது.

0 Responses to 48 மணி நேரத்தில் பாகிஸ்தான் நடிகர்-நடிகைகள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும்: நவநிர்மான் சேனா கெடு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com