Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழக மக்களுக்கும், உலக தமிழர்களுக்கும் எந்த ஒரு ஆபத்து வந்தாலும், வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க மாட்டேன். மக்களுக்காக களத்தில் இறங்கி போராடுவேன் என்று நடிகர் விஜய் கூறியுள்ளார்.
காங்கிரசில் நடிகர்கள் உட்பட யார் விரும்பினாலும் சேர்ந்துகொள்ளலாம் என்று ராகுல்காந்தி சென்னை வந்தபோது கூறினார்.

ராகுல் காந்தியின் கருத்தை கேட்ட விஜய் ரசிகர்கள், தங்களது தலைவர் காங்கிரசில் இணைவாரா? அல்லது புதுக் கட்சி ஆரம்பிப்பாரா என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளிக்கும் வகையில் இன்று பத்திரிகையாளர்களை சந்திப்பதாக விஜய் அறிவித்திருந்தார்.

அதன்படி சென்னை வடபழனில் உள்ள தனது ஜே.எஸ்.திருமண மண்டபத்தில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய விஜய், நான் அரசியலுக்கு வருவது பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும், எதிர் காலத்தல் அரசியலுக்கு வர வாய்ப்புள்ளது. தமிழகத் தமிழர்களையும், உலகத் தமிழர்களையும் கலந்து ஆலோசித்துவிட்டு செய்தியாளர்களாகிய உங்கள் கருத்தறிந்த பின்னர்தான் அரசியலுக்கு வருவேன் என்றும் அறிவித்தார்.

மேலும் பேசிய விஜய், ஒரு நெருங்கிய நண்பர் மூலம் ராகுல் காந்தியை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. டெல்லியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நானும் ராகுல் காந்தியும் சந்தித்து பேசினோம். என்னுடைய திரைப்பட வாழ்க்கை குறித்து ராகுல் ஆர்வமாக கேட்டறிந்தார். இளைஞர்கள் முன்னேற்றம் குறித்து பேசினோம். காங்கிரஸ் கட்சியில் இணைய ராகுல் காந்தி என்னை அழைத்தது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

நீங்கள் காங்கிரசில் இணைவதை இலங்கைத் தமிழர்கள் எதிர்ப்பதாக கூறப்படுகிறதே என செய்தியாளர்கள் கேட்டதற்கு பதில் அளித்த விஜய், இளைஞர்களை அரசிலுக்கு இழுப்பதில் ராகுல் முழு கவனம் செலுத்துகிறார். நானும் இளைஞர்களை அரசிலுக்கு வருவதை ஆதரிக்கிறேன். இரண்டு பேரின் நோக்கமும் ஒன்றாக இருந்தது. மற்றபடி ஒன்றும் இல்லை.

தமிழக மக்களுக்கும், உலக தமிழர்களுக்கும் எந்த ஒரு ஆபத்து வந்தாலும், வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க மாட்டேன். மக்களுக்ககாக களத்தில் இறங்கி போராடுவேன் என்றார்.

தி.மு.க., அதிமுக போன்ற கட்சிகளுடன் இணைய வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, தமிழக மக்களுக்கு எந்த அரசாவது நல்லது செய்தால் அந்த அரசோடு நானும் என் ரசிகர்களும் கைகோர்ப்பது பற்றி யோசிப்போம். அது எப்போது நடக்கும் என்பது பற்றி எனக்கு தெரியாது என்று பதிலளித்தார் விஜய்.

0 Responses to தமிழர்களுக்கு எந்த ஒரு ஆபத்து வந்தாலும் போராடுவேன்: விஜய்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com