ஈழமுரசு கடந்த 15 ஆண்டுகளாக புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் கைகளிலே தவழ்ந்துகொண்டிருக்கும் ஒரு இதழ். தாயக விடுதலையை நோக்கி புலம்பெயர்ந்த தமிழ் மக்களை அணிதிரட்ட வேண்டும் என்ற பெரும் நோக்கத்தோடு கப்டன் கஜன் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட இந்த இதழ், பல்வேறு தடைகளையும், இடர்களையும் கடந்து இன்றும் வெளிவந்துகொண்டிருக்கின்றது.
பொருளாதாரத் தடைகளால் கடந்த காலங்களில் இந்த இதழ் சில தடவைகள் இடை நிறுத்தப்பட்டிருந்தபோதும், இம்முறை அவற்றுக்கும் அப்பால் சில அச்சுறுத்தல்கள், நெருக்கடிகளால் தனது பயணத்தை தொடர முடியாமல் இடைநிறுத்த வேண்டிய ஒரு இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டிருந்தது.
எனினும், அன்றிலிருந்து இன்றுவரை தனது பயணத்தில் மாறாத உறுதியுடன் எந்தச் சமரசங்களுமின்றி ‘உண்மையின் முன்னால் நடு நிலைமை என்பதில்லை’ என்ற கொள்கையுடன் மீண்டும் ஈழமுரசு தனது பயணத்தை தொடங்குகின்றது.
ஈழமுரசின் இந்தப் புதிய பயணத்திற்கு துணையாக நிற்கின்றது ஊடக இல்லம் (னிழிஷ்விலிஐ deவி னிedஷ்ழிவி - னிedஷ்ழி க்ஷிலிற்விe). தாயகத்தின் கனவை நெஞ்சில் சுமந்தபடி பிரான்சில் ஆரம்பிக்கப்பட்டுள்ள ஊடக இல்லம் பல்வேறு நோக்கங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. அதன் ஒரு வடிவமாக ஈழமுரசும் அங்கம் பெறுகின்றது.ஈழமுரசின் இந்தப் புதிய பயணத்திற்கு பக்க துணையாக நிற்கவேண்டியது வாசகர்களாகிய நீங்
களே. வர்த்தகர்கள், விளம்பரதாரர்களின் பேராதரவோடு ஈழமுரசு உங்கள் கைகளை இலவசமாக வந்தடைகின்றபோதும் இதன் வளர்ச்சியின் தூண்
களாக வாசகர்களாகிய நீங்களே நிற்கின்றீர்கள்.
கடந்த காலங்களில் எவ்வாறு ஈழமுரசுடன் தோளோடு தோள் நின்று இதன் வளர்ச்சியிலும், உயர்ச்சியிலும் உங்கள் ஆதரவையும், ஆலோசனைகளையும் வழங்கினீர்களோ, அதேபோன்று எதிர்வரும் காலங்களிலும் உங்கள் ஆதரவை எதிர்பார்த்து நிற்கின்றோம்.
எத்தனை தடைகள் வருகின்றபோதும், எத்தனை இடர்கள் வருகின்றபோதும் அவற்றை எல்லாம் உடைத்தெறிந்து விடுதலையை நோக்கி இன்னும் வீச்சாக நடப்பதற்கு உங்கள் ஆதரவு என்றும் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன், தமிழ் மக்களின் தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமையை வென்றெடுப்பதற்காக உங்கள் கரங்களைப் பற்றியபடி மீண்டும் நாங்கள் நடக்கத் தொடங்குகின்றோம்.
ஆசிரியர் தலையங்கம்
ஈழமுரசு



0 Responses to ஈழமுரசின் புதிய பயணம்