முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா அரசியலுக்கு வருவது தொடர்பாக விடுத்துள்ள அறிவிப்பு தொடர்பாக ஆளும் மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஐக்கிய மக்கள் முன்னணி கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய தெரிவிக்கையில் - 2005 ஆம் ஆண்டுக்கு முன் சரத் பொன்சேகா யார்? இன்று அரசியலுக்கு வருவதாக அவர் தெரிவித்திருப்பது அவர் ஒரு மலிவான அரசியல்வாதி என்பதையே வெளிப்படுத்தி நிற்கிறது என்று கூறியுள்ளார்.
அரசின் ஊடக பேச்சாளர் அனுர பிரயதர்சன யாப்பா தெரிவிக்கையில் - பொன்சேகாவின் அரசியல் பிரவேசம் உண்மையிலேயே ஏற்றுக்கொள்ளமுடியாத விடயம். அவர் விடுக்கும் கருத்துக்கள் அதைவிட ஏற்றுக்கொள்ளமுடியாத விடயம். அரசியலுக்கு வருவது தொடர்பான அறிவிப்பை விடுவதற்கு கூட்டிய ஊடகவியலாளர் மாநாட்டில் சரத் பொன்சேகா பேசுகையில் வரப்போகும் அரச தலைவர் தேர்தலில் பிரபாகரனின் பெற்றோரது வாக்குகளையும் பெற்று வெற்றிபெறுவேன் என்று கூறியிருக்கிறார்.
இது உண்மையில் ஒரு அருவருக்கத்தக்க கருத்து. நாட்டை காப்பதற்கு உயிர்நீத்த படையினர் பொன்சேகாவின் இந்த கூற்றை மன்னிக்கமாட்டார்கள் - என்று கூறினார்.
அமைச்சர் ஹேலிய ரம்புக்வல கூறுகையில் - பொன்சேகா அரசியலுக்கு வருவதாக அறிவித்திருப்பது வெட்கக்கேடான விடயம். நாட்டு மக்கள் போரை மறந்துவிட்டார்கள். பிரபாகரன் சொன்னது சரி. எமது மக்கள் மிக இலகுவாக பழையவற்றை மறந்துவிடுவார்கள். ஐக்கிய தேசிய கட்சியின் சின்னமான யானை இன்று ஜே.வி.பியின் மணியையும் பொன்சேகாவையும் கட்டியபடி அலைகிறது - என்று தெரிவித்தார்.

0 Responses to பிரபாகரனின் பெற்றோரின் வாக்குகளையும் பெற்று வெல்வேன்: பொன்சேகாவின் கருத்துக்கு அரசு கண்டனம்