Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பொன்சேகா அதிபரானால் ராணுவ ஆட்சி வருமா?

பதிந்தவர்: தம்பியன் 28 November 2009

இலங்கையில் அடுத்த ஆண்டு (2010) ஜனவரி மாதம் 26-ந்தேதி அதிபர் தேர்தல் நடக்கிறது. இதில், ஆளும் சுதந்திர கட்சி சார்பில் அதிபர் மகிந்தரா ராஜபக்ஷே போட்டியிடுகிறார்.

இவரை எதிர்த்து எதிர்க்கட்சி சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த முடிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி தலைமையில் ஐக்கிய தேசிய கூட்டணி என்ற பெயரில் புதிய கூட்டணி அமைக்கப்பட்டது.

இதன் சார்பில் ராணுவ தலைமை தளபதி பதவியில் இருந்து விலகிய சரத் பொன்சேகா போட்டியிடுகிறார்.

இந்த நிலையிலும், இலங்கை அதிபர் தேர்தலில் சரத் பொன்சேகா வெற்றி பெற்று அதிபரானால் பிரதமராக ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கே நியமிக்கப்படுவார் என இலங்கை சுதந்திர மகாஜன கட்சி அறிவித்துள்ளது.

இந்த தகவலை அக்கட்சியின் தலைவர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். மேலும் அவர்,

சரத் பொன்சேகா குறித்து மகிந்த ராஜபக்சே அரசு ஏராளமான வதந்திகளை கிளப்பி விடுகிறது. பொன் சேகா அதிபரானால் இலங்கையில் ராணுவ ஆட்சி ஏற்படும் என்கின்றனர்.

உண்மையை கூற வேண்டுமானால் ராஜபக்சே அரசுதான் ராணுவ ஆட்சி போன்று நடக்கிறது. ராணுவ பணியில் இருந்து ஓய்வு பெற்ற 24 உயர் அதிகாரிகளை ராஜபக்சே முக்கிய பதவிகளில் நியமித்துள்ளார். அதிபராவதற்கு பொன்சேகாவிற்கு அனைத்து தகுதிகளும் உள்ளன என்று தெரிவித்துள்ளார்.

0 Responses to பொன்சேகா அதிபரானால் ராணுவ ஆட்சி வருமா?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com