Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ராஜபச்சே அரசுக்கு ஆதரவு இல்லை: ஐ.தே.க

பதிந்தவர்: தம்பியன் 24 November 2009

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் ஜயலத் ஜயவர்தனை, எதிர்க்கட்சிகள் ஓருபோதும் ஆதரவளிக்காது என தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தில் இணைந்து கொள்ளுமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன விடுத்த வேண்டுகோளை ஐக்கிய தேசியக் கட்சியோ அல்லது வேறும் எதிர்க்கட்சிகளோ ஏற்றுக்கொள்ளாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணியின் எந்தவொரு கட்சியும் வீழ்ச்சியடைந்து வரும் ஆளும் கட்சியுடன் இணைந்துகொள்ளத் தயாரில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மக்களினால் நிராகரிக்கப்பட்டுள்ள ஒர் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதனைத் தவிர வேறு வழியில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பல சந்தர்ப்பங்களில் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க முன்வந்த போதிலும் அந்த சந்தர்ப்பங்களில் அரசாங்கம் குறுகிய அரசியல் இலாபங்களை அடைந்து கொள்வதற்கே முயற்சி மேற்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனவே சிதைவடைந்து செல்லும் ஓர் அரசாங்கத்திற்கு ஐக்கிய தேசிய முன்னணியின் எந்தவொரு கட்சியும் ஆதரவளிக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to ராஜபச்சே அரசுக்கு ஆதரவு இல்லை: ஐ.தே.க

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com