ரஜினிகாந்தும்- பா.ஜ.க.வும் இணைந்தால் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற முடியும் என்று ‘துக்ளக்’ ஆசிரியர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
துக்ளக் பத்திரிக்கையின் 48வது ஆண்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியும் கலந்து கொண்டிருந்தார். அங்கு உரையாற்றும் போதே குருமூர்த்தி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “அ.தி.மு.க., மற்றும் தி.மு.க.,வால் இளைஞர்களை ஈர்க்க முடியாது என்பதால், தமிழகத்தில் அரசியல் மாற்றம் வரும். தமிழக அரசியலில் ரஜினிக்கு நல்ல வாய்ப்பு உள்ளது. கழகங்களுடன் கூட்டணி அமைக்காமல் இருக்க ரஜினி வகுத்த செயல் வியூகம் தான் ஆன்மீக அரசியல். ரஜினியும், பா.ஜ.,வும் இணைந்தால் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற முடியும். கழங்களின் தொடர்ச்சியாகவே நடிகர் கமல் அரசிலுக்கு வருகிறார் எனத் தெரிகிறது.” என்றுள்ளார்.

0 Responses to ரஜினியும் - பா.ஜ.க.வும் இணைந்தால் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றலாம்: ‘துக்ளக்’ குருமூர்த்தி