நாட்டில் ஆட்சி மாறினாலும் காட்சிகள் எதுவும் மாறவில்லை என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“இன்றும் கூட ஆட்கள் காணாமற்போகின்றனர். சடலமாக மீட்கப்படுகின்றனர். இது எல்லாம் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்திலிருந்து இன்றைக்கும் நடந்துகொண்டுள்ளது. இதுதான் யதார்த்தம். இன்று நீங்கள் கூட்டம் நடத்தினாலும் புலனாய்வுப் பிரிவினர் வந்திருப்பார்கள். பொதுமக்களை விட புலனாய்வுப் பிரிவினர் அதிகமாக இருப்பார்கள். ஒன்றும் மாறவில்லை.” என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, தமிழ் மக்கள் தங்களை வெளித்தரப்பினர் கையாள்வதை இனங்கண்டு அதிலிருந்து மீண்டு, தனி நிகழ்ச்சி நிரலுடன் சர்வதேச சமூகத்தை கையாளவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

0 Responses to ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை: கஜேந்திரகுமார்